₹249 ப்ளானை நீக்கிய ஜியோ மற்றும் ஏர்டெல் இனி குறைந்தபட்ச ரீசார்ஜ் 299 ரூபாய் மட்டுமே
அட்மின் மீடியா
0
₹249 ப்ளானை நீக்கிய ஜியோ மற்றும் ஏர்டெல் இனி குறைந்தபட்ச ரீசார்ஜ் 299 ரூபாய் மட்டுமே
குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் பேக் ஆக இருந்த ₹249 ப்ளானை ஜியோ நீக்கியது. 28 நாள்கள் செல்லுபடியாகும் இத்திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ், இலவச ஜியோ சினிமா உள்ளிட்ட பல சலுகைகள் இருந்தன.
தற்போது இந்தக் குறைந்தபட்ச ப்ளானை ஜியோ நீக்கியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், *299 (1.5 GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச பேக் (₹50 கூடுதல்) ஆகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பிலிருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்தப் பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ.249 ரீசார்ஜ் ஆகத்தான் இருந்தது.
ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் திடீரென நீக்கியது ஜியோ பயனார்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
ஏர்டெல்
ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் தனது ₹249 திட்டத்தை இன்று முதல் நிறுத்தியுள்ளது
பாரதி ஏர்டெல் அதன் ₹ 249 ப்ரீபெய்ட் திட்டத்தை ஆகஸ்ட் 20, 2025 முதல் நிறுத்தும் என்று அதன் வலைத்தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அத்தியாவசிய தரவு நன்மைகளைத் தேடும் குறுகிய கால பயனர்களுக்கு 1 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கியது.
ஆகஸ்ட் 20, 2025 அன்று காலை 00:00 மணி முதல் ரீசார்ஜ் 249 நிறுத்தப்படும்” என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் உள்ள அறிவிப்பு, ஆகஸ்ட் 20, 2025 அன்று காலை 00:00 மணி முதல் இந்தத் தயாரிப்பு கிடைக்காது என்பதை உறுதிப்படுத்துகிறது.
Tags: தொழில்நுட்பம்