லாக்கப் மரணம் : அஜித்குமாரை சரமாரியாக அடித்து துன்புறுத்தும் போலீசார் வெளியான அதிர்ச்சி வீடியோ
திருப்புவனம் - விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள்
திருப்புவனம் இளைஞர் அஜித் காவல் துறையினரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (29) என்ற இளைஞர். இந்நிலையில் கடந்த ஜூன் 27 அன்று திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) என்பவர் இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது காரை இளைஞர் அஜித்குமாரிடம் கொடுத்து பார்க் செய்து தருமாறு கூறியுள்ளனர்.
அதன்பிறகு காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனதையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது இளைஞர் அஜித் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது
இந்நிலையில், திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை தொடர்ந்து, காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இளைஞர் அஜித் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்நிலையில் சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவல்துறையினர் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/AnshithaPrincey/status/1939950022042292443
Tags: தமிழக செய்திகள்