இணையதளத்தில் திடீரென டிரெண்ட் ஆன கூமாபட்டி... யாரும் போய் ஏமாறாதீங்க... முழு விவரம்
இணையதளத்தில் திடீரென டிரெண்ட் ஆன கூமாபட்டி... யாரும் போய் ஏமாறாதீங்க... முழு விவரம்
சமூக வலைதளங்களில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ‘கூமாபட்டி’ கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலானது. ‘இந்த பக்கம் பார்த்தா அமேசான் காடு மாதிரி இருக்கும் அந்த பக்கம் பார்த்தா அந்தமான் மாதிரி இருக்கும்’ என இளைஞர் ஒருவர் ரீல்ஸ் பதிவிட்ட நிலையில், பலரும் கூகுள் மேப்பில் கூமாபட்டியை தேடி வருகின்றனர்.
அத்துடன் பலரும் நேரில் அந்த இடத்திற்கு செல்ல வழிதேடி வந்து கொண்டிருக்கின்றனர். கூமாபட்டி இன்ஸ்டாகிராமில் டிரெண்டாவதால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற வேண்டாம் என பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன்
உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..
கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர்.
மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை.
தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே!மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!
Tags: தமிழக செய்திகள்