Breaking News

கொடைக்கானலில் Para sailing Parachute செல்ல ரூ 200 மட்டுமே உடனே முன்பதிவு செய்யுங்க

அட்மின் மீடியா
0

கொடைக்கானலில் Para sailing Parachute நிகழ்ச்சி ரூ 200 மட்டுமே உடனே முன்பதிவு செய்யுங்க


கோடை காலத்தை முன்னிட்டு குளுகுளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அவர்களை மகிழ்விக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து பாராசூட், பாரா சைலிங் நிகழ்ச்சியை நாளை முதல் மே 19 வரை 4 நாட்கள் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நடத்த உள்ளது.

காலை 9:00 மணி முதல் மாலை 5 :00மணி வரை வானில் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் ரசிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 60 வயது வரை உள்ள இரு பாலரும் பங்கேற்கலாம்.

உங்களை பிரம்மிக்க வைக்கும் வான் சாகச விளையாட்டு (Para sailing - Parachute) 

நாள்:- மே 16 முதல் 19 வரை நடைபெறவுள்ளது. 

நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (Based on Wind and Weather condition)

இடம்:-  கொடைக்கானல், மூஞ்சிக்கல் மைதானம்

வயது வரம்பு:- 15 வயது முதல் 60 வயது வரை

கட்டணம்:- ரூ.200/- மட்டுமே..

முன்பதிவிற்கு:- +91 73733 90531

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அதிகாரிகள் பாராசூட்டில் பறந்து நேரடி ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.சுற்றுலாப் பயணிகளை எவ்வளவு தூரம் பறக்கச் செய்யலாம், காற்றின் திசை, பாதுகாப்பு மற்றும் அனுபவ தரம் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

மேலும், இதே நேரத்தில் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து 62-வது மலர் கண்காட்சியும் மற்றும் கோடை விழாவும் விரைவில் நடைபெறவுள்ளதால், கொடைக்கானல் சுற்றுலா பயணிகளால் மேலும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சென்னை, பொள்ளாச்சி என நடத்தப்பட்ட பாராச்சூட் சாகச நிகழ்வு தற்போது கோடைவிடுமுறையை கோடையில் கழிக்க வரும் சுற்றுலாவாசிகளுக்காக திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback