Breaking News

வாட்ஸ் அப்பில் மெட்டா ஏஐ பயன் படுத்துவது எப்படி முழு விவரம் How to chat with Meta AI in a whatsapp group

அட்மின் மீடியா
0
வாட்ஸ் அப்பில் மெட்டா ஏஐ பயன் படுத்துவது எப்படி முழு விவரம்



கூகுள் நிறுவனத்தின் ஜெமினி மற்றும் OpenAI நிறுவனத்தின் ChatGPT போன்றவற்றிற்கு போட்டியாக மெட்டா நிறுவனம் Meta AI அறிமுகப்படுத்தியுள்ளது

Meta AI என்பது செயற்கை நுண்ணறிவு கொண்ட அசிஸ்டன்ட் ஆகும். இது கேள்விகளுக்கு பதில் அளிப்பது, கட்டுரைகளை எழுதுவது, மொழிபெயர்ப்பது, படங்களை உருவாக்குவது போன்ற பல்வேறு பணிகளில் பயனர்களுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்துள்ளது.

தற்போது எக்ஸ் தளம், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயல்கள் மூலம் இந்திய பயனர்கள் மெட்டாAI சாட் பாட்டை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


Meta AI  வாட்ஸ் ஆப் செயலியில் எப்படி பயன்படுத்துவது?

முதலில் ப்ளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்,
அடுத்து சாட் வரிசைகள் இருக்கும் இடத்தில் புதிய சாட் உருவாக்கும் பட்டனுக்கு மேலே புதிதாக நீல நிறத்தில் ஒரு வட்டம் போன்ற ஆப்ஷனை இருக்கும் அது தான் மெட்டா ஏஐ ,அதை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய சேட் திறக்கும். அதில் நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உகந்த பதில்களை செயற்கை நுண்ணறிவு உங்களுக்கு சொல்லும். 

மேலும் உங்கள் வாட்ஸ் ஆப் குரூப் சாட் மற்றும் தனிப்பட்ட சாட்களில் கூட இந்த மெட்டாAI உதவியை பெறலாம் என்று whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மெசேஜ் பகுதியில் “@” என்பதை என்டர் செய்து கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து “Meta AI” என்பதை தேர்வு செய்யவும்.அடுத்து நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை டைப் செய்து சென்ட் பட்டனை அழுத்தவும்.இதற்கு மெட்டா AI தகுந்த முறையில் பதில் அளிக்கும். குரூப்பில் உள்ள அனைத்து நபர்களாலும் அதனை காண முடியும்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback