Breaking News

End to End Encryption கைவிட மாட்டோம் கட்டாயப்படுத்தினால் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடுவோம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் வாதம்!

அட்மின் மீடியா
0

End to End Encryption கைவிட மாட்டோம் கட்டாயப்படுத்தினால் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடுவோம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் வாதம்!

வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்” என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வாதம்!

வாட்ஸப் தன்னுடைய பயனர்ர்களின் தகவல்கள் பாதுகாப்பிற்காக  512 பிட் என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறது. வாட்ஸ்-அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் ஒவ்வொரு வார்த்தையும் 512, 0 மற்றும் 1 என பிரித்து சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் அவற்றை மீண்டும் ஒருங்கிணைத்து அனுப்புகிறது. இதன் மூலமாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும்.

இந்நிலையில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் இந்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு மாற்றத்தை கொண்டு வந்த நிலையில், புதிய சட்ட மாற்றத்தை வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்றவைகளின் மெட்டா நிறுவனம் மீறுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதனை எதிர்த்து இந்நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் நிலவுவதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தெரிவித்தார். 

இதற்கு வாட்ஸ் -அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா கடும் கண்டனம் தெரிவித்து, “உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டங்கள் இல்லை. இந்த சட்டம் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இது போன்ற சட்டம் கொண்டுவரப்பட்டால் இந்தியாவிலிருந்து வாட்ஸ் அப் வெளியேற வேண்டி இருக்கும்” என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback