Breaking News

உம்ரா செல்ல விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு சவூதி மற்றும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க உம்ரா பயணிகள் கோரிக்கை

அட்மின் மீடியா
0
உம்ரா செல்ல விசா கிடைக்காததால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு சவூதி மற்றும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க உம்ரா பயணிகள் கோரிக்கை



ஒவ்வொரு ஆண்டும் உம்ரா பயணத்திற்கு செல்ல சவூதி அரசிடம் உம்ரா விசா விண்ணப்பித்து அதன்பின்னர்தான் செல்ல முடியும். 

இந்த வருடம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உம்ரா பயணம் மேற்கொள்ள விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்து விசா விண்ணப்பித்து காத்திருந்த நிலையில் இதுவரை பலருக்கும் விசா உறுதி செய்யப்படவில்லை. விசா கிடைக்காததால் பயணம் மேற்கொள்ளாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-


உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி..

ரமலான் முடிந்து ஷவ்வால் மாத உம்ராவிற்கு வழக்கம் போல் பலரும் ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் இவ்வாண்டு சவூதி அரசாங்கம் முன்னறிவிப்பின்றி உம்ரா விசா பெறுவதற்கு QUOTA முறையைக் கொண்டு வந்து விட்டதால் உலகம் முழுவதும் உம்ரா விசா பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

நமது சங்க உறுப்பினர்களில் பலரும் விமான பயணம் மற்றும் மக்கா-மதீனா ஹோட்டல்களுக்கான தொகைகளையெல்லாம் செலுத்தி விட்ட நிலையில்
எதிர்பாராத இந்த திடீர் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விமான நிறுவனங்களிடம் இந்த நிலைமைகளை எடுத்துக் கூறி பயணத் தேதிகளை மாற்றித் தர நமது சங்கம் முயற்சி எடுத்து வருகிறது.

ஷவ்வால் மாத உம்ராவிற்கு முன்பதிவு செய்து விசா கிடைக்காத நமது சங்க உறுப்பினர்கள் தங்கள் நிறுவனங்களில் முன்பதிவு செய்துள்ள ஹாஜிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள எதிர்பாராத இந்த நிலைமைகளை நன்முறையில் எடுத்துச் சொல்லி ஹஜ் சீசன் முடிந்த பிறகு அவர்களுக்கு வாக்களித்தபடி உம்ராவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback