Breaking News

பாஜகவுடன் கூட்டணியில் பாமகவிற்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு Pattali Makkal Katchi

அட்மின் மீடியா
0

 பாஜகவுடன் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாமக முழு விவரம்

பாஜக உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 19 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது .இதில் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மற்ற உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது

அதன்பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை நேரில் சந்தித்தனர்  பாமக தேசிய ஜனநாயகக் கூட்ணியின் கீழ் இணைத்து போட்டியுடுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது, மேலும்  தமிழ்நாட்டின் தேசிய இந்திய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்துவிட்டது. 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட உள்ளது. மேலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, இ.கம்யூனிஸ்டு,மா.கம்யூனிஸ்டு , மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி,மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேசமயம், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிகளில் இன்னும் கூட்டணி முடிவாகமல் உள்ளது

மேலும் தமிழ்நாட்டில் பாஜக மெகா கூட்டணிக்கான பணியை செய்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ்,இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் 

பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

அதேபோல் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடப்போவதாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்

மேலும் ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் அமமுக விற்கு 4தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக - பாமக இடையேயான தொகுதி பங்கீடு கையெழுத்தானது தேசிய ஜனநாயக கூட்டணில் பாமக 10 இடங்களில் போட்டி

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback