Breaking News

ஓடும் இரயிலில் மொபைல் சார்ஜர் பாயிண்டில் கெட்டில் வைத்து வெந்நீர் வைத்த நபர்? அடுத்து என்ன நடந்தது முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஓடும் இரயிலில் மொபைல் சார்ஜர் பாயிண்டில் கெட்டில் வைத்து வெந்நீர் வைத்த நபர்? அடுத்து என்ன நடந்தது முழு விவரம்

பீகாரில் இருந்து புதுடெல்லி சென்ற மகாபோதி எக்ஸ்பிரஸ் இரயிலில் சார்ஜ் பாயிண்டை பயன்படுத்தி மின்சார கெட்டிலில் வெந்நீர் வைத்த நபருக்கு ரூ.1000 அபராதம் விதித்த இரயில்வே போலிஸார்!

மூதாட்டி ஒருவர் மாத்திரை சப்பிடுவதற்காக வெந்நீர் போட்டதாக வாலிபர் விளக்கம் கொடுத்த நிலையில், உயர் மின்சாதங்களை பயன்படுத்தினால் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை


பீகார் மாநிலம் காயா பகுதியில் இருந்து டெல்லிக்கு மகாபோதி எக்ஸ்பிரஸ் இரயில் நாள்தோறும் செல்வது வழக்கம். இந்த ரயிலில் பீககாரை சேர்ந்த 36 வயது நபர் பயணம் செய்து கொண்டு இருந்தார். ரயிலில் வயதான பயணி ஒருவர் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதற்காக சுடு தண்ணீர் இல்லை என கவலை கொண்டுள்ளார் 

உடனடியாக் அவருக்கு உதவும் நோக்கில் அதற்காக இரயிலில் இருக்கும் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தியுள்ளார்.பொதுவாக சார்ஜிங் பாயிண்டில் அதிக வோல்ட்டேஜ் இருக்கும் மின் சாதங்களை பயன்படுத்த கூடாது என்று ஒரு விதி உள்ளது. ஆனால் அதையும் மீறி இந்த நபர் தன்னிடம் இருந்த  எலக்ட்ரானிக் கெட்டிலை பயன்படுத்தி சுடு தண்ணீர் போட்டு கொடுத்துள்ளார்

அந்த நேரத்தில் அங்கு வந்த இரயில்வே அதிகாரி, இதனை பார்த்து கண்டித்துள்ளார். மேலும் அவருக்கு ரூ.1000 அபராதமும் விதித்துள்ளார்.மேலும் சார்ஜிங் பாயிண்டில் மொபைல் சார்ஜை தவிர வேறு உயர் மின் சாதங்களை பயன்படுத்தினால் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்

இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், " ரயிலில் சார்ஜிங் பாயிண்ட்களில் செல்போன்கள் மட்டுமே சார்ஜ் செய்யலாம்.அதைவிடுத்து மின்சாரத்தை இழுக்கும் மின் சாதனங்களை பயன்படுத்தினால் மின்கசிவு ஏற்பட்டு ரயிலில் தீ விபத்து உள்பட பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றனர்

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback