காலரா பரவல் அதிகரிப்பு காரைக்கால் மாவட்டம் பொது சுகாதார அவசர நிலையாக அறிவிப்பு
புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
காரைக்கால் பகுதியில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய்தொற்று அதிக அளவில் பதிவாகி வருகின்றன, மேலும் தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் என்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் வயிற்றுப்போக்கு நோய்/காலரா நோயை” காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த சுகாதாரக் குழுபொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பின்வருவனவற்றைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அரிவித்துள்ளது
போதுமான அளவு கொதிக்கவைத்த தண்ணீரை (20 நிமிடங்கள் கொதிக்கவைத்து) குடிக்கவும்.
பொது இடங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாதுகாப்பான குடிநீரை உட்கொள்வதை உறுதி செய்யவும்.
கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும்.•
பொதுக் கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும்.
உங்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும்.
அக்கம்பக்கத்தினர் / மூத்த குடிமக்கள் யாராவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும்.
Tags: தமிழக செய்திகள்