Breaking News

குடும்பத் தலைவிகள் பெயரில் தான் இனி வீடுகள் வழங்கப்படும்... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

குடும்பத்தலைவிகள் பெயரில் தான் இனி நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார். 

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்என்று மாற்றி விட்டோம். இனி அதில் வழங்கப்படும் வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவிகளின் பெயர்களில்தான் வழங்கப்படும் என்பதை இந்த கூட்டத்தில் நான் அறிவித்து, பெண்களைச் சொற்களில் போற்றாமல் வாழ்க்கையிலும் போற்றுவோம். பெண்ணுரிமை என்பதைத் தாண்டி, பெண்களுக்கான அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்வோம் என்று தெரிவித்தார்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback