Breaking News

முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வேண்டுமா? எப்படி முழுவிவரம்...

அட்மின் மீடியா
0

தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.



அதன்படி முதலில் 

http://cmcell.tn.gov.in/login.php

மேல் உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள் அதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் இருக்கும். அதில் தங்களுக்கு எது ஏற்றதோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்

பின்பு அதில் முதலமைச்சரின் தனிப்பிரிவு” என்பதை click செய்யுங்கள் அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்தால் “About Cm Cell” என்பதை Click செய்யுங்கள்.

அடுத்து அதில் புதிய பயனாளர் பதிவு ஆங்கிலத்தில் New User Registration என்பதை கிளிக்  செய்யுங்கள்.

அடுத்து அதில் தங்களது தங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் உங்கள் முகவரி மின்னஞ்சல் போன்ற தகவல்களை  சரியாக பதிவிட்டு ஓக்கே கொடுங்கள் 

அடுத்து உங்கள் லாக்இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு திரையில் தோன்றும். உங்கள் password-ஐ நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்களது லாக் இன் ஐடி மற்றும் Password உள்ளிட்டு உள்ளே செல்லவும்

அடுத்து அதில்  கோரிக்கை வகை என்ற option-ஐ click செய்தால் ஒரு பட்டியல் தோன்றும். 

அவற்றில் தாங்கள் எந்த கோரிக்கையை அளிக்க விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து மேலே குறிப்பிட்டுள்ள தொடர்பு முகவரியும் பாதிக்கப்பட்ட முகவரியும் ஒன்றா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும் (ஆம்/இல்லை) என இரு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.அதில் உங்களுக்காக புகார் அளித்தால் அதில் ஆம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இல்லை என்பதை செலக்ட் செய்தால் நீங்கள் வேறு ஒருவருக்காக புகார் அளிக்கலாம். 

வேறு ஒருவருக்காக புகார் அளித்தால் அதில் அவர்களது விவரங்களை உள்ளிடவும்.

பின் கோரிக்கை (Grievance) என்ற பகுதியில் தங்களது கோரிக்கைகள் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் இருக்கலாம். உங்கள் புகார் 4,000 வார்த்தைகளுக்கு அதிகமாக இருக்கக்கூடாது 

மற்றும் %,&,$,@ போன்ற சிறப்புக் குறியீடுகள் பயன்படுத்த கூடாது.புகாரை தமிழில் பதிவு செய்ய`Unicode Font’-ல் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்பதும் அவசியம். 

உங்களது புகாரை உள்ளிட்டவுடன் சமர்ப்பி (Submit) என்ற option-ஐ click செய்தவுடன் உங்கள் புகார் சமர்ப்பிக்கபட்டுவிடும் 

மற்றும் உங்களுக்கான கோரிக்கை எண் கொடுக்கப்படும் அதனை குறித்து வைத்து கொள்ளுங்கள்.

தங்களது புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அதில் Track Greviance என்பதை click செய்து தங்களது புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்


தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....

Chief Minister's Special Cell ,

Secretariat, 

Chennai - 600 009.

Phone Number : 044 - 2567 1764

Fax Number : 044 - 2567 6929

E-Mail : cmcell@tn.gov.in


இந்த இணையதளம் மூலம் பெறப்படும் மனுக்களுக்கான ஒப்புகைச் சீட்டு உடனுக்குடன் மனுதாரர்களின் இ-மெயில் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும். எஸ்.எம்.எஸ். மூலமும் ஒப்புகைச் செய்தி அனுப்பப்படும்.

இணையதளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அந்த மனு தொடர்புடைய அலுவலகத்துக்கு கம்ப்யூட்டர் மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback