Breaking News

காஷ்மீர் சோக வரலாறு பாகம் 5

அட்மின் மீடியா
0
என்ன தான் பிரச்சனை காஷ்மீரில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய வரலாறு

*காஷ்மீர் சோக வரலாறு*         பாகம் 5⃣


         
✍காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் வெளியிலிருந்து தூண்டி விடுவதாகவும், 


✍ஆயுதப் பயிற்சி கொடுப்பதாகவும், அன்று முதல் இன்று வரை உள்ள  அரசு வரை தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. 


✍ ‘காஷ்மீர் விடுதலைக்கான கோரிக்கை’ நியாயமானதுதான்! ஏன் அதைப் பற்றிப் பேசவே மறுக்கிறார்கள். 


✍இந்திய அரசும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தான்! கிழக்குப் பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) விடுதலையின் போது இந்திய இராணுவம் முன்னின்று பிரித்துக் கொடுத்தது. 


✍ஈழ விவகாரத்தில் ஆரம்பத்தில் இலங்கை அரசை அச்சுறுத்துவதற்காக தமிழ் போராளிக் குழுக்களுக்கு ஆதரவளித்ததும், இந்தியாவில் வைத்து ஆயுதப் பயிற்சி வழங்கியதுமான செயல்களில் ஈடுபட்டது.


✍இந்தியா. பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கின்றனர்.


✍காஷ்மீர் மக்களை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே ஆக்கிரமிப்பாளர்கள்தான். 


✍இந்நாடுகள் தங்கள் சொந்த நலனுக்காக காஷ்மீரிகளின் விருப்பங்களை மட்டுமில்லாமல் அவர்களையும் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


✍காஷ்மீர் மக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக இந்தியாவும், பாகிஸ்தானும் துப்பாக்கி முனையில் கட்டிப் போட முடியாது. 




Tags: காஷ்மீர் வரலாறு

Give Us Your Feedback