Breaking News

காஷ்மீர் சோக வரலாறு பாகம் 3

அட்மின் மீடியா
0
என்னதான் பிரச்சனை காஷ்மீரில்
பலருக்கும் நினைவு படுத்த வேண்டிய வரலாறு


*காஷ்மீர் சோக வரலாறு*              பாகம் 3⃣
  
✍இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ஷேக் அப்துல்லா என்று குற்றஞ்சாட்டி 1953 இல் காஷ்மீர் அரசை கலைத்துவிட்டு நேரு அவரைச் சிறையிலடைத்தார். 



✍காஷ்மீரின் பிரதமர் பதவி, முதல்வர் பதவியாகவும், ஜனாதிபதி பதவி ஆளுநர் பதவியாகவும் மாற்றம் பெற்றன. 


✍இந்த மாதிரியான செயல்பாடுகள் காஷ்மீரிகளுக்கு முரணாகவே இருந்தது. 


✍அதனால் அம்மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடலானார்கள். 


✍அதைக் கடுமையாக ஒடுக்குவதற்கு இந்திய அரசு தயங்கியதும் இல்லை.


✍1957 இல் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகிறது. 


✍காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு என்பதெல்லாம் கிடையாது என நேரு அறிவிக்கிறார். 


✍இது திடீரென்று வந்த அறிவிப்பு அல்ல. பத்தாண்டுகளாக படிப்படியாக நகர்த்தப்பட்ட சூழ்ச்சிதான். ‘இந்தியாவின் தலைசிறந்த ஜனநாயகவாதி’யான நேருவின் ஆட்சி காலத்திலே ஜனநாயக விரோதமாக காஷ்மீர் இந்தியாவுடன்  இணைக்கப்பட்டது. 


✍அவருக்குப் பின்பு வந்த ஆட்சி யாளர்களும் இதைக் கட்டிக்காக்கும் பணியைச் செவ்வனே செய்து  கொண்டு இருக்கின்றனர்.


✍இந்தியாவில் ஜனநாயகப் படுகொலை நடைபெறுகிறது என்றால், பாகிஸ்தானில் காஷ்மீர் பற்றி எதிரான கருத்துக்களை வெளியிடுவதற்கே யாருக்கும் உரிமை இல்லை என அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் சொல்கிறது (காஷ்மீருக்கான தனித்த அரசமைப்புச் சட்டம் - பிரிவு 7). 


✍பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் (POK) பகுதியில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பாகிஸ்தானோடு காஷ்மீரை இணைக்கப் பாடுபடுவதாக ஒப்புதல் கையெழுத்திட வேண்டும் என்பது விதியாக உள்ளது. 


✍காஷ்மீர் (POK) அரசைக் கலைக்கும் அதிகாரமும் பாகிஸ்தான் அரசுக்கு உண்டு. 


✍பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களின் கருத்துக்களைப் பொருட்படுத்துவ தில்லை. 


✍காஷ்மீர் விடுதலையை ஆதரிக்கவுமில்லை. தனது இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக காஷ்மீர் பிரச்சனையைப் பயன்படுத்துகிறது. 


✍பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்குத் தன் ஊழல்களை மறைக்கவும், தன் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு காஷ்மீர் பிரச்சனை உதவிகரமாக இருந்து வருகிறது. 



*சோக வரலாறு தொடரும்------*

Tags: காஷ்மீர் வரலாறு

Give Us Your Feedback