காஷ்மீர் சோக வரலாறு பாகம் 2
அட்மின் மீடியா
0
என்னதான் பிரச்சனை காஷ்மீரில்
பலருக்கும் நினைவு படுத்த வேண்டிய வரலாறு
பலருக்கும் நினைவு படுத்த வேண்டிய வரலாறு
✍26.10.1947 அன்று காஷ்மீரைத் தற்காலிகமாக இணைப்பதற்கான இணைப்பு உடன்படிக்கை மன்னர் ஹரிசிங்கிற்கும் இந்திய அரசிற்கும் கையெழுத்தானது.
✍இந்த ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை இந்திய அரசாங்கம் பெற்றது.
✍இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவின்படி சுயாட்சி உரிமைகள் கொண்ட மாநிலமாக காஷ்மீர் இருக்கும்.
✍சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு பொதுவாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவை காஷ்மீரிகளே தீர்மானிப் பார்கள் என நேரு அவர்கள் வானொலியில் (02.11.1947) தெரிவிக்கிறார்.
✍இதன் பிறகு நடந்ததெல்லாம் காஷ்மீரிகளுக்கு எதிராக நடந்தது.
✍370 ஆவது பிரிவின்படி சுயாட்சி உரிமையை இந்திய அரசு நீர்த்துப் போகச் செய்தது.
✍1951 இல் ஜம்மு - காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
✍ஷேக் அப்துல்லா பிரதமர் ஆனார்.
✍ஜனாதிபதியாக காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் மகன் கரண் சிங் பதவியேற்றார்.
✍ஜனாதிபதியை சட்டமன்றம்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
✍ஆனால் நேருவின் வற்புறுத்தலினால் கரண்சிங் ஜனாதிபதியானார்.
✍பிரஜா பரிசத் (ஆர்.எஸ்.எஸ். இன் ஒரு பிரிவு) என்னும் இந்து அமைப்பு மாநில சுயாட்சியை எதிர்த்தது.
✍காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியது.
✍இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
✍அதனால் ஷேக் அப்துல்லா, நேருவை மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றில் நம்பிக்கையற்றவர் எனப் பேசலானார்.
✍இந்தக் கருத்து வேறுபாட்டால் பேச்சு வார்த்தை நடத்தி, ‘டெல்லி ஒப்பந்தம்’ ஜூலை 24, 1952 இல் கையெழுத்தானது.
✍இதில் காஷ்மீர் சுயாட்சி பற்றி வலியுறுத்தப்பட்டது. டெல்லி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கழித்து ஷேக் அப்துல்லாவுக்கு ரகசிய குறிப்பில் பொதுவாக்கெடுப்புக்கு சாத்திய மில்லையென 1948 இல் முடிவு செய்துள்ளதாக நேரு தெரிவித்தார்.
✍இந்தியாவின் தெற்காசிய பிராந்திய விரிவாக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள, இறுதியாக நேரு, காஷ்மீரின் சுயாட்சி உரிமையை இரத்து செய்தார்.
✍பொது வாக்கெடுப்பு வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டார்.
✍ நேரு எந்தவித ஜனநாயக விவாதத்திற்கும் தயாராக இல்லை எனத் தெரிகிறது.
✍காஷ்மீர் எக்காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தானுக்குப் போய்விடக்கூடாது என்பதில் மட்டும் அவர் குறியாக இருந்தார்
✍ஜனநாயகத்தைப் பற்றியோ, காஷ்மீரிகளின் பிரச்சனை பற்றியோ அவருக்குக் கவலை இல்லை.
தன் உரிமைக்கான போராட்டம் நடத்துகிறார்கள்.
போராட்டத்தை ஒழிக்கின்றோம் என்று அப்பாவி பொதுமக்கள் மீது இந்திய இரானுவம் வன்முறை வெறியாட்டம் நடத்துகிறது.
இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளாதாகவும்
ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அரசு கூறுகிறது.
ஆனால் உயிரழப்புக்களும் காயமடைந்தவர்களும்,
இதை விட பன்மடங்கு அதிகம் என்பது தான் உண்மை
*சோகம் தொடரும்---------*
இதை விட பன்மடங்கு அதிகம் என்பது தான் உண்மை
*சோகம் தொடரும்---------*
Tags: காஷ்மீர் வரலாறு