Breaking News

காஷ்மீர் சோக வரலாறு பாகம் 4

அட்மின் மீடியா
0
என்னதான் பிரச்சனை காஷ்மீரில்
பலருக்கும் நினைவு படுத்த வேண்டிய வரலாறு
*காஷ்மீர் சோக வரலாறு*         பாகம் 4⃣ 

    
✍1990 ஜூலை 5 இல் இந்தியாவில் அமலாக்கப்பட்ட ‘ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம் - ஜம்மு & காஷ்மீர்’மற்றும்


✍‘ஜம்மு - காஷ்மீர் கலகப்பகுதிச் சட்டம்’ ஆகிய இரு சட்டங்களும், 


✍‘யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், ஐந்து பேர்களுக்கு மேல் கூடினால் கைது செய்யலாம், பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் நபர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தலாம், இரண்டு ஆண்டுகள் பிணையின்றி சிறையில் அடைக்கலாம்’ என்று கூறுகின்றன. 


இந்த சட்டத்தை எதிர்த்து கிளர்ச்சிகள் தொடர்ந்தன. காஷ்மீர் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றனர். ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரை இந்தியா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது. இரு தரப்பினராலும் பொது மக்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக நடந்தன இதில் பலரும் கொல்லபட்டனர்

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து, இந்திய நிர்வாகத்தில் உள்ள கார்கில் மாவட்டத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதை அடுத்து மீண்டும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூண்டது. ஆக்கிரமிப்பாளர்களை இந்தியா விரட்டி அடித்தது. அந்தச் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது என்று இந்தியா குற்றஞ்சாட்டி, உறவுகளை முறித்துக் கொண்டது.
இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், தொடரும் வன்முறைகளால், குறிப்பாக இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் மீது 2001ல் நடந்த தாக்குதலால், பாதிக்கப்பட்டது.


ஆதாரம்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

Tags: காஷ்மீர் வரலாறு

Give Us Your Feedback