பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார் விஜயதரணி
பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார் விஜயதரணி
பாஜகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயதாரணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி. தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு, 2024-ல் அவர் பா.ஜ.க-வில் இணைந்திருந்தார். விஜயதரணி தமிழ்நாடு மகிளா காங்கிரஸின் முன்னாள் தலைவராவார் இவர் மூன்று முறை எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்தவர்.
மேலும் பாஜக சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு விஜயதாரணி தோல்வி அடைந்தார். அவர் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படாததால் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் விஜயதாரணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ள அவர், இன்னும் சற்று நேரத்தில் இணைய உள்ளார். பா.ஜ.க.வில் எந்த பதவியும் வழங்கப்படாத நிலையில் த.வெ.க.வில் அவர் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பால கங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள் என பலரும் இணைய உள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
