Breaking News

ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் இருந்தும் ரூ.500 பைன் கட்டிய நபர் காரணம் என்ன தெரியுமா

அட்மின் மீடியா
0

ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் இருந்தும் ரூ.500 பைன் கட்டிய நபர் காரணம் என்ன தெரியுமா முழு விவரம்


மும்பையை சேர்ந்தவர் ஆதித்யா. இவர் உறவினரை ரயில் ஏற்றிவிட கல்யாண் ரயில் நிலையம் சென்றார். ஆனால் அந்த ரயில் 5 மணி நேரம் தாமதமாக வந்தது. எனினும் ஆதித்யா காத்திருந்து உறவினரை ரயிலில் ஏற்றிவிட்டு வந்தார்.

இந்தநிலையில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது டிக்கெட் பரிசோதகர் அவரிடம் சோதனை நடத்தினார். அப்போது ஆதித்யா அவரிடம் இருந்த பிளாட்பாரம் டிக்கெட்டை கொடுத்தார்.

பிளாட்பாரம் டிக்கெட்டை ஆய்வு செய்த பரிசோதகர் அது காலாவதியாகி விட்டதாக ஆதித்யாவுக்கு ரூ.500 அபராதம் விதித்தார். ரெயில் தாமதமாக வந்தது குறித்து விளக்கியும் டிக்கெட் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதித்து உள்ளார்.

ரெயில்வே விதிகளின்படி பிளாட்பாரம் டிக்கெட் 2 மணி நேரம் மட்டுமே செல்லும். டிக்கெட் வாங்கிய 2 மணி நேரத்துக்குள் பயணி ரெயில் நிலைய பிளாட்பாரத்தை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். அதை தாண்டி இருந்தால் பயணிக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த அடிப்படையில் ஆதித்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback