TVK ஆதரவு அதிமுக 25 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? அடுத்து என்ன நடக்கும்
கொறடா உத்தரவை மீறி தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தால் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படுமா? AIADMK's 30 MLAs set to support TVK government whip order

தமிழக வெற்றி கழகம் ஆட்சி மீது பெரும்பான்மை நிரூபிக்க தீர்மானம் கொண்டுவரப்படுகிறது . இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கொறடா உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளது,
இந்நிலையில் அந்த 25 நபர்கள் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதா என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
சட்டமன்ற நடைபெற்ற சட்டமன்ற வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, ஒரு கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால்,
ஒரு கட்சியிலிருந்து பிரிந்து செல்லும் குழு, மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 3-ல் 2 பங்கு பலத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
அதிமுகவின் மொத்த பலத்தில் இந்த 25 பேர் அந்த 3-ல் 2 பங்கு அளவை எட்டவில்லை என்றால், அவர்கள் தகுதி நீக்கத்திற்கு உள்ளாக நேரிடும்.
கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா பிறப்பிக்கும் உத்தரவை மீறுவது தகுதி நீக்கத்திற்கு வலுவான காரணமாகும்.
கட்சியின் பொதுச்செயலாளர் நான் தான். நான் நியமித்த கொறடா பிறப்பித்த உத்தரவை இந்த 25 பேரும் மீறியுள்ளனர். சி.வி. சண்முகம் தரப்பிடம் 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள் இல்லை. எனவே அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்படும்." என்று எடப்பாடி கூறுகிறார்.
வேலுமணி தரப்பினரோ, தங்கள் தரப்பே உண்மையான அதிமுக என்றும், கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும் இவர்கள் வாதிடுகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சட்டமன்ற சபாநாயகருக்கே உள்ளது. அதிமுகவின் உள்கட்சிப் பூசலையும், தற்போதைய அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதுதான் மிக முக்கியமானது.
இந்த விவகாரம் விரைவில் நீதிமன்றத்திற்கும் செல்ல வாய்ப்புள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அந்த 25 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரக்கூடும் என்பதில் சந்தேகமில்லை
கொறடா என்றால் என்ன?
நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களில் கட்சி உறுப்பினர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம் படைத்தவர் கொறடா. இவர் கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையில் பாலமாக செயல்படுவார். அரசு தீர்மானங்களுக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களிக்க கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிடுவார்.
கொறடா உத்தரவை மீறினால்,
கொறடா உத்தரவை மீறினால், அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின் கீழ் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.க்கள் தங்கள் பதவியை இழக்க நேரிடும்.
கட்சி தலைமை அல்லது கொறடா பிறப்பித்த உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அவர்களைத் தகுதி நீக்கம் செய்யப் பேரவைத் தலைவருக்கு (சபாநாயகர்) கொறடா பரிந்துரைக்கலாம்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட உறுப்பினரின் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவி பறிபோகும்.
கொறடா உத்தரவை மீறிய உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கொறடா பரிந்துரைப்பார்.
இது கட்சித் தாவலாகக் கருதப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
தகுதி நீக்கம் தொடர்பான இறுதி முடிவை அந்தந்த மாநில சட்டப்பேரவை சபாநாயகர் (Speaker) எடுப்பார்.
விதிவிலக்கு - இணைப்பு (Merger): கட்சியின் மொத்த உறுப்பினர்களில் 2/3 பங்கு உறுப்பினர்கள் தனித்துக் பிரிந்து வேறொரு கட்சியுடன் இணைந்தால் மட்டுமே இந்த தகுதி நீக்கம் செல்லாது.
தனிப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விதியை மீறினால் தகுதி நீக்கம் உறுதி.
விதிவிலக்கு - மன்னிப்பு: வாக்களித்த 15 நாட்களுக்குள், கட்சி தலைமை அந்த எம்.எல்.ஏ.வின் வாக்களிப்பை மன்னித்து ஏற்றுக்கொண்டால் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
நடைமுறை:கட்சித் தலைமை சபாநாயகரிடம் அந்த எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்யுமாறு மனு அளிக்கும். சபாநாயகர் விசாரணை நடத்தி, தகுதி நீக்கம் குறித்து அறிவிப்பார். இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
Tags: தமிழக செய்திகள்
