Breaking News

எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம் உள்ளிட்ட 26 பேர் பதவி பறிப்பு எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு ஆதரவாக உள்ளவர்களின் கட்சிப் பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 





அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நத்தம் விஸ்வநாதன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் உள்ள சி.வி.சண்முகம், காமராஜ், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், இசக்கி சுப்பையா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு்ள்ளன

சி .வி.சண்முகம் அணியின் அனைத்து கட்சிப் பதவிகளையும் எம்.எல்.ஏ.க்கள் நீக்கியதுடன், தேர்தலில் தோற்றும் கட்சிப் பதவிகளை வகிக்கும் சில முன்னாள் அமைச்சர்களையும் நீக்கி, அந்தப் பதவிகளுக்குப் புதியவர்களை நியமித்து இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். 

17 மாவட்ட செயலாளர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தவெகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டதாலும், விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டதாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback