Breaking News

நன்றிக்கடன் செலுத்தவே நான் வந்திருக்கிறேன் -பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன் 100% என்னை நம்பலாம் எனக்கு ஓரு முறை வாய்ப்பு கொடுங்கள் -விஜய் பேச்சு

அட்மின் மீடியா
0

நன்றிக்கடன் செலுத்தவே நான் வந்திருக்கிறேன் -பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன் 100% என்னை நம்பலாம் எனக்கு ஓரு முறை வாய்ப்பு கொடுங்கள் -விஜய் பேச்சு 


திருப்பூரில் நடந்த ரோடு ஷோவில் விஜய் பேசியதாவது: நாளை மறுநாள் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்னர் நெசவாளர்கள் சிறுகுறு நடுத்தர தொழில்கள், விவசாயிகள், காவல்துறையினர் தொடர்பான நமது திட்டங்கள் உங்களிடம் படிக்கிறேன்.

கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் பகுதி மக்களுக்கு என் அன்பு வணக்கம் என தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்

என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே, திருப்பூர் மக்களே, வரும் 16ஆம் தேதி தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட இருப்பதாக தெரிவித்தார். அதற்கு முன்னதாக சில வரிகளை இங்கு கூற இருப்பதாகவும் தெரிவித்தார். 

நெசவாளர்கள் சிறு குறு நடுத்தர தொழில்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் சம்பந்தமான நம்முடைய வாக்குறுதிகளை கூறுவதாக தெரிவித்தார்.

நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்காக அரசுக்கு சொந்தமான ஒரு உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். 

முக்கிய நகரங்களில் வெற்றி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். 

நிலையற்ற நூல் விலை மற்றும் மின்சார நெருக்கடி சுமையை பகிர்ந்து கொள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர்கள் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வங்கி மூலம் நேரடியாக தமிழக அரசு வழங்கும். 

கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட் ஆகவும், விசைத்தறி இலவசம் மின்சாரம் 1500 யூனிட்டுகளாகவும் உயர்த்தப்படும். 

நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைப்பதற்காக அவர்கள் வழங்கும் நூல் சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றுக்கு நமது தமிழக வெற்றிக்கழக அரசால் 50% மானியம் வழங்கப்படும்.

நமது தமிழக வெற்றிக்கழக அரசில் 10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும். 

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சி இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புகளை உருவாக்கும் துறை தான் எம்எஸ்எம்இ-ல் இந்தியாவில் அதிகமான எம் எஸ் எம் இருக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. ஆனால் இப்படிப்பட்ட இந்த பெருமைக்கு மிகவும் பெருமை சேர்த்தது யார் தெரியுமா என்றும் அதிக MSME நிறுவனங்கள் மூடப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடம் தமிழ்நாடு என்று தெரிவித்தார். இதற்கு காரணம் திமுக அரசு என்று குறிப்பிட்டார்.

நெருக்கடியில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூபாய் 15,000 கோடி ஃபண்டு உருவாக்கப்படும். 

விரிவான ஆய்வுக்குப் பிறகு மின்கட்டணத்தை முறைப்படுத்த குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு 100% மின்சார வரி விலக்கு பெறும். 

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலகளவில் போட்டி போடுவதை உறுதி செய்வதற்காக அவற்றை நவீன மயமாக்க ஒரு யூனிட்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை என்ற அளவில் 35 சதவீத நேரடி மூலதன மானியத்தை நமது டி வி கே அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.

காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனுக்கான அறிவிப்பு

அரசு ஊழியர்களின் நலனுக்காக பழவைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வழங்குவது குறித்து நமது TVK அரசு பணிவுடன் பரிசீலித்து மதிப்பீடு செய்யும்.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு பணியை நிறைவு செய்துள்ள அனைத்து தற்காலிக ஆசிரியர்களுக்கும் செவிலியர்களுக்கும் மற்றும் எழுத்தர் பணியாளர்களுக்கும் நமது TVK அரசு பணி நிரந்தரம் செய்யும். 

பதவி உயர்வுக்கு பணம் பெரும் கலாச்சாரத்தை நமது TVK அரசு முடிவுக்கு கொண்டு வரும். அனைத்து அரசு ஊழியர்களின் இட மாற்றங்களும் வெளிப்படையான மற்றும் காலவரையறைக்கு உட்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.

காவலர்களின் அடிப்படை மாத ஊதியத்தை ரூ. 18,200 இல் இருந்து 25,000 ரூபாயாக நமது டிவிக்கு அரசு உயர்த்தும். அதிகமான அழுத்தம் உள்ள பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு படிப்படியாக மாதம் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். 

காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத்தை (போலீஸ் வெல்பர் அண்ட் வொர்கிங் கண்டிஷன் ஆக்ட்) நமது TVK அரசு இயற்றும். சட்டத்தின் படி காவலர்களின் பணி நேரங்கள் முறைப்படுத்தப்படும்.

அதிக பணி சுமை கொண்ட காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு சுழற்சி முறையில் விடுமுறையை உறுதி செய்யப்படும். சலவை படியை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். 

மேலும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் காவலர்கள் நல மருத்துவமனைகள் நிறுவப்படும். பெண் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நெறிமுறை அல்லது பாதுகாப்பு பணிகளுக்கு பணியமர்த்தப்பட மாட்டார்கள். 

பெண் காவல்துறை பணியாளர்களுக்கு என தனி ஓய்வறைகளும், நடமாடும் டாய்லெட் யூனிட்டுகளும் அமைக்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.

நீங்க எல்லோரும் இந்த விஜய்யை 100% நம்பலாம் என்றும் நான் உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன் எனவும் உங்களுக்காக நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமே வந்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார். 

பொய் வாக்குறுதிகள் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன் என்றும் தெரிவித்தார். அதனால் உங்கள் அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க மகனுக்கு, உங்க பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கை கூப்பி கேட்டுக் கொண்டார். 

இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் வெற்றி நிச்சயம் நல்லதே நடக்கும் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback