ஆன்லைன் மூலம் உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் ,கல்விதகுதி குற்றவழக்கு , சொத்துவிவரம் அனைத்தும் தெரிந்து கொள்வது எப்படி
ஆன்லைன் மூலம் வேட்பாளர் விவரம் தெரிந்து கொள்ளலாம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆன்லைன் மூலம் உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் ,கல்விதகுதி குற்றவழக்கு , சொத்துவிவரம் அனைத்தும் தெரிந்து கொள்வது எப்படி
உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் அவர்களின் முழுவிவரம் ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விபரங்களையும் பொதுமக்கள் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள 'ECINET' என்ற ஒருங்கிணைந்த தளத்தைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ECINET இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'Know Your Candidate' (KYC) என்ற பகுதியைத் தேர்வு செய்யவும். உங்கள் மாநிலம் (தமிழ்நாடு/புதுச்சேரி) மற்றும் உங்கள் சட்டமன்றத் தொகுதியின் பெயரைப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.இப்போது உங்கள் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் அவர்களின் கட்சிச் சின்னங்களுடன் திரையில் தோன்றும்.
ஒவ்வொரு வேட்பாளரின் பெயருக்கு அருகிலும் உள்ள விபரங்களை கிளிக் செய்வதன் மூலம் கீழ்க்கண்டவற்றை அறியலாம். வேட்பாளர் மீது ஏதேனும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்கள், வங்கிக் கடன்கள்.வேட்பாளர் என்ன படித்துள்ளார் என்ற விபரம். வேட்பாளர் தாக்கல் செய்த முழுமையான அஃபிடவிட் நகலைப் பதிவிறக்கம் செய்து படித்துப் பார்க்கலாம்.
வேட்பாளரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் விபரங்கள்.இணையதளம் மட்டுமின்றி, உங்கள் ஸ்மார்ட்போனில் 'Know Your Candidate' (KYC) என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்தும் இந்த விபரங்களை மிக எளிதாகப் பெற முடியும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்களின் விபரங்களை, பொதுமக்கள் அனைவரும், 'ஆன்லைன்' வாயிலாக தெரிந்து கொள்வதற்கு, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேட்பாளர் விவரங்கள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://affidavit.eci.gov.in/
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
