Breaking News

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு



தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant), மற்றும் ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி:-

அலுவலக உதவியாளர் (Office Assistant), 

ஓட்டுநர் (Driver)

கல்வித் தகுதி 

அலுவலக உதவியாளர் (Office Assistant)  பணிக்கு 

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி (Bicycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

நகல் எடுக்கும் இயந்திரம் (Xerox) மற்றும் பிரிண்டர் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் (Driver) பணிக்கு:-

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1988-க்கு முன் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வாகன இயந்திர நுணுக்கங்கள் மற்றும் முதலுதவி (First Aid) பற்றிய அறிவு கட்டாயம்.

வயது வரம்பு :-

பொதுப் பிரிவு (GT): 18 முதல் 32 ஆண்டுகள் வரை.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC / BCM): 18 முதல் 34 ஆண்டுகள் வரை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC / DNC): 18 முதல் 34 ஆண்டுகள் வரை.

ஆதிதிராவிடர் (SC / SCA) மற்றும் பழங்குடியினர் (ST): 18 முதல் 37 ஆண்டுகள் வரை.

ஆதரவற்ற விதவைகள் (அனைத்து பிரிவும்): 18 முதல் 37 ஆண்டுகள் வரை.

மாற்றுத்திறனாளிகள்: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்

மாத சம்பளம்:-

அலுவலக உதவியாளர் பணிக்கு  (Office Assistant) ரூ. 15,700 – 50,000/- (நிலை 1)

ஓட்டுநர் (Driver) ரூ. 19,500 – 62,000/- (நிலை 1)

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: 

The Chief Administrative Officer,

Tamil Nadu State Election Commission,

No. 208/2, Jawaharlal Nehru Road,

Arumbakkam, Chennai – 600 106.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

02.01.2026

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tnsec.tn.gov.in/tnsec_static/index_eng.php

நிபந்தனைகள்

1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://tnsec.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி. சாதிச்சான்று. முன்னுரிமை சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களில் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

2 தேவையான இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

3. தகுதியில்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10 x 4 Inches Postal Cover) .

5. அரசு விதிகளின் படி முன்குறிப்பிட்ட இனச்சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும்.

6. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் விரைவஞ்சல் / மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

7. நியமன எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அல்லது எத்தகைய காரணமும் குறிப்பிடாமல் நியமனத்தை இரத்து செய்யவோ ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback