Breaking News

SIR படிவத்தை நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

அட்மின் மீடியா
0

SIR படிவத்தை நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

SIR-காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்.

மேலும் முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது  என  தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்

சிறப்பு தீவிர வாக்காளர்திருத்தப்பணிக்காக வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், புகைப்படம் அச்ச டிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சம்பத்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக 4-ந்தேதிமுதல் வந்து கொடுப் பார்கள் அந்த படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் தகவலை பொதுமக்கள் நிரப்பி தரவேண்டும். அதனுடன் எந்த ஆவணமும் இணைத்து தர தேவையில்லை என கூறிய அவர்..

வாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா? எப்படி செக் செய்யலாம்? how to check voter id list in tamilnadu 2025

https://www.adminmedia.in/2025/10/how-to-check-voter-id-list-in-tamilnadu.html

ஒருவேளை 2002, 2005 ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் கள் இல்லாவிட்டால்எந்த தொகுதியில் அதற்கு முன்பு அவர்களுக்கு வாக்கு இருந்தது என்பதை ஆய்வு செய்து, அதனுடன் ஒப்பிட்டு இணைக்கப்படும். 

ஒருவேளை அவர்கள் பெயர் இல்லாவிட்டால் அவர்களது பெற்றோர் அடையாள அட்டை, அவர்கள் வசித்த தொகுதி, அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். 

எதிலுமே அவர்கள் பெயர் இல்லாவிட்டால் வரைவு பட்டியலில் அவர்கள் பெயர் இடம் பெறாது. மீண்டும் அவர்கள் ஆவணங்களை கொடுத்து மனு செய்ய வேண்டும் என கூறினார்

மேலும் வாக்காளர்கள் முகவரி மாறி இருந்தால் அதிகாரியிடம் தெரி விக்கலாம். தொகுதி மாறி இருந்தால் அவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. மீண்டும் ஆட்சேபனை காலமான டிசம்பர் 9-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ந் தேதிக்குள் முகவரி மாற்றத்திற்கான மனு மற்றும் அதற்கான ஆவணங் களை இணைத்துத் தரவேண்டும் என்று தெரிவித்தார்.

சொந்த ஊரில் பெற்றோர்கள் இருப்பார்கள் ஆனால் அவர்களது மகனோ, அல்லது மகளோ நகரங்களில் பணியாற்றுபர்களுக்கு அவர்களது சொந்த ஊரில் வாக்காளர் அடையாள அட்டை எண். இருக்கும். அவர்களுக்கு 

கணக்கெடுப்பு படிவத்தை பிள்ளைகளுக்கு பதில் அவர்கள் பெற்றோர்களே பூர்த்தி செய்து கொடுத் தால் போதும் என கூறினார்,

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback