Breaking News

ஆதார் கார்டு திருத்தம் செய்ய இனி அலைய வேண்டாம் - ஆன்லைனில் நீங்களே மாற்றிகொள்ளலாம் - வந்தாச்சு புதிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஆதார் கார்டு திருத்தம் செய்ய இனி அலைய வேண்டாம் - ஆன்லைனில் நீங்களே மாற்றிகொள்ளலாம் - வந்தாச்சு புதிய அறிவிப்பு

12 இலக்க எண்களைக் கொண்ட ஆதார் அட்டையில் இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமக்களின் விவரங்களும் அடங்கியிருக்கும் ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாகும். இது ஒவ்வொருவரும் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய ஒன்றாகும்.

இனி ஆதார் அட்டை  அவசியம் என்பதால் அதில் இருக்கும் தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது முக்கியமாகும். அந்த ஆதார் அட்டையில் உங்கள் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளடங்கியிருக்கும். 

அந்த ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி, பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற உங்கள் அருகில் உள்ள தாலுக்கா அலுவலங்களிலும் தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம்.

ஆதாரில் உள்ள முகவரி மற்றும் தந்தை பெயர், கணவர் பெயர் ஆகியவற்றை இனி நீங்களே ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம்

ஆதார் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு நவம்பர் 1 முதல் ஆதார் தகவல்களில் திருத்தம் செய்ய ஆதார் சேவை மையங்களுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. வீட்டிலிருந்தே உங்கள் ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனில் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.இந்தப் புதிய மாற்றங்கள் ஆதார் சேவைகளை வேகமாகவும், எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் என்று கூறப்பட்டுள்ளது. 

வீட்டிலிருந்தே ஆதார் சேவைகளைப் பெற முதல் நபருக்கு ரூ. 700 மற்றும் அதே முகவரியில் உள்ள ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ரூ. 350 கட்டணமாக வசூலிக்கப்படும்.

Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback