குடியரசுத் துணைத் தலைவர் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியின் பொது வேட்பாளராக, தெலங்கானாவைச் சோ்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதா்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு நடைபெறவிருக்கும் தோ்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
எதிா்க்கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்பட வேண்டுமென்ற முடிவு ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டதாகும். பொது வேட்பாளா் தோ்வில், அனைத்து எதிா்க்கட்சிகளும் கருத்தொற்றுமையை வெளிப்படுத்தின. இது, ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் தாக்குதலுக்கு இலக்காகும்போதெல்லாம், அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றுபடுகின்றன.
தற்போதைய சித்தாந்தப் போரில் (குடியரசு துணைத் தலைவா் தோ்தல்) எங்களின் பொது வேட்பாளராக பி.சுதா்சன் ரெட்டியை தோ்வு செய்துள்ளோம்.இவா், நாட்டின் புகழ்பெற்ற-முற்போக்கான நீதிபதிகளில் ஒருவா். ஆந்திர உயா்நீதிமன்றம், குவாஹாட்டி உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி என நீண்டகால சட்ட அனுபவம் கொண்டவா். சமூக-பொருளாதார-அரசியல் நீதியின் நிலையான மற்றும் துணிச்சல்மிக்க பாதுகாவலனாக செயல்படுபவா். ஏழைகளின் ஆதரவாளா். தனது பல்வேறு தீா்ப்புகளின் வாயிலாக ஏழைகள் மற்றும் அவா்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளாா்.
நாட்டின் விடுதலைப் போராட்டம், அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தில் நங்கூரமிட்ட மாண்புகளை முழுமையாக பிரதிபலிப்பதால், அவரைத் தோ்வு செய்துள்ளோம் என்றாா் காா்கே.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்