அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் - சிதறி நிலைகுலைந்த இஸ்ரேல் தலைநகர் வீடியோ பார்க்க
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் - சிதறி நிலைகுலைந்த இஸ்ரேல் தலைநகர் வீடியோ பார்க்க
ஈரானிய அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 30 டோமஹாக் ஏவுகணைகளை ஏவியுள்ளன.
தாக்குதல்களுக்குப் பிறகு கதிர்வீச்சு குறித்த அச்சங்கள் எழுந்தாலும், மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரானின் தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா மற்றும் நெஸ் ஜியோனா ஆகிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால், இஸ்ரேலில் பொது மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேலின் மத்திய பகுதியில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் சைரன் சத்தமும் ஒலிக்கப்பட்டது. இதேபோன்று, பென் குரியன் விமான நிலையம் உள்பட பல்வேறு தலங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடந்துள்ளது.இதுதவிர, உயிரியியல் ஆராய்ச்சி மையம், ஆயுத தளவாட தளங்கள் மற்றும் பல்வேறு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரான் 30க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்துள்ளன.
நாட்டின் பிற பகுதிகளிலும் சைரன்கள் ஒலித்தன, இதனால் பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் அறிவுறுத்தலின் பேரில் பதுங்கு குழிகளுக்கு விரைந்து சென்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1936715734249578923
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1936715381605072950
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ