Breaking News

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறவும்,வெளிநாடு செல்லவும் NOC சான்று பெற எளிய முறை - தமிழ்நாடு அரசு அரசானை வெளியீடு

அட்மின் மீடியா
0

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறவும்,வெளிநாடு செல்லவும் NOC சான்று பெற எளிய முறை - தமிழ்நாடு அரசு அரசானை வெளியீடு

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று பெறுவதற்காக எளிய முறையில் விண்ணப்பிப்பதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு





பழைய நடைமுறையில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து தடையில்லா சான்று பெறுவதற்கான எளிய நடைமுறை ஏற்படுத்த தமிழக அரசு அமைத்த குழு 01.04.2025 அன்று விரிவாக ஆய்வு செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த பரிந்துரை செய்தது.

அதன்படி, சாதாரண பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது Annexure N –ல் குறிப்பிட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். 

மேலும் இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறையின் நிர்வாக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை IFHRMS மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தேவையான சான்றிதழ்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.ஒருவேளை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மேலும் விவரங்கள் தேவைப்படும் 

மேலும் அவசர கால நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட துறை தலைமையே என்.ஓ.சி அல்லது அடையாள சான்றிதழ் அல்லது இரண்டையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த பரிந்துரைகளை ஏற்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback