Breaking News

ஜாய் ஆலுக்காஸ் ஓனர் துபாயில் தற்கொலை என பரவும் வதந்தி? உண்மை என்ன Joyalukkas Founder Has Not Died

அட்மின் மீடியா
0

ஜாய் ஆலுக்காஸ் ஓனர் துபாயில் தற்கொலை என பரவும் வதந்தி? உண்மை என்ன 


பரவும் செய்தி:-

ஜாய் ஆலுக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை என ஓர் செய்தியை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்

உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியும் அதில் உள்ள நபரும் ஜாய் ஆலுக்காஸின் அதிபர் கிடையாது

மாறாக அவர் கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தொழிலதிபர் ஜாய் அரக்கல்  என்பவர் ஆவார்,இவரும் கேரளாவில் வயநாடு பகுதியில் ஆரக்கல் அரண்மனையால் பிரபலமாக பலருக்கும் தெரிந்தவர்.

இவர் கடந்த 2020 ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி துபாயில் உள்ள பிசினஸ் பே என்ற வணிகக் கட்டடத்தின் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

இவரைத்தான் ஜாய் ஆலுக்காஸ் அதிபர் என்று தவறான பெயரால் பரப்பப்படுகிறது.

உண்மையான ஜாய் ஆலுக்காஸ் அதிபர் வேறு ஒருவர் ஆவார் ஜாய் ஆரக்கல் இறந்ததைத் தான் ஜாய் ஆலுக்காஸ் கம்பெனியின் ஓனர் ஜாய் ஆலுக்காஸ் இறந்ததாக, தவறான செய்திகள் பரவிக் கொண்டு இருக்கிறது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து ஜாய் அலுக்காஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது

2020 ம் ஆண்டு நடந்த ஓர் செய்தியினை மீண்டும் தற்போது பொய்யாக பரப்புகின்றார்கள், அப்போதே இந்த செய்தியினை மறுப்பு தெரிவித்து அட்மின்மீடியா செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.adminmedia.in/2020/04/blog-post_127.html

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.joyalukkas.in/about-us

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/Joyalukkas/status/1255478394973716485

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback