பற்றி எரியும் இஸ்ரேல் .வேகமாக பரவும் காட்டுத்தீ ,தேசிய அவசரநிலை பிரகடனம் , முழு விவரம் இதோ israel fire
பற்றி எரியும் இஸ்ரேல் .வேகமாக பரவும் காட்டுத்தீ முழு விவரம் இதோ
இஸ்ரேலில் ஜெருசலேம் மற்றும் மத்திய பகுதிகளில் காட்டுத்தீ பரவி வரும் அதேவேளை, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கடுமையான வானிலை நிலைமைகள் தொடரும் எனவும் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
வலுவான காற்று, மிக அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் ஆகியவை அந்த நாட்டில் காட்டுத்தீயின் அபாயத்தையும் பரவலையும் தீவிரப்படுத்தி வருகின்றன.
பல பகுதிகளில் வெப்பநிலை 36° முதல் 38° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது, சில பகுதிகளில் 39° வரை பதிவாகியுள்ளது.
ஷ்ஃபேலா பகுதி, தெற்கு கடற்கரை சமவெளி மற்றும் மேற்கு முதல் வடமேற்கு நெகேவ் பகுதிகளில் மிக அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
பல பகுதிகளில் ஈரப்பதம் 10%க்கும் கீழே குறைந்துள்ளது, குறிப்பாக வலுவான காற்று வீசும் பகுதிகளில் இது காட்டுத்தீயை மேலும் தீவிரமாக்குகிறது.
தீயணைப்பு வீரர்கள், வானிலை ஆய்வு மையத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்து, பல இடங்களில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சில நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்நாட்டின் மிகவும் மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத் தீயானது போரில் பலியான இஸ்ரேலின் வீரர்களுக்கான நினைவு நாளான நேற்று (ஏப்.30) முதல் பல்வேறு நகரங்களுக்கு பரவி வருகின்றது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், பலர் தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசிப்பதால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் வரலாற்றில் மிகப்பெரிய தீ விபத்துகளாக இந்தத் தீ விபத்துகள் இருக்கலாம் என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின் ஜெருசலேம் மாவட்டத் தளபதி ஷ்முலிக் ஃப்ரீட்மேன் கூறியுள்ளார்
ஜெருசலேமின் மேற்கே உள்ள காடுகள் நிறைந்த மலைகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது, தீயை அணைக்க, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்தக் காட்டுத் தீயானது தேசிய அளவிலான அவசரநிலை எனவும் ஜெருசலமைப் பாதுகாப்பதற்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான முக்கிய நெடுஞ்சாலையில் காட்டுத் தீ பரவியதால் அங்கு சென்று கொண்டிருந்த வாகனங்களை நடுவழியிலேயே விட்டுவிட்டு மக்கள் ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Tags: இந்திய செய்திகள்