மே 1 முதல் அமலாக உள்ள புதிய மாற்றங்கள் முழு விவரம் இதோ..!
மே 1 முதல் அமலாகியுள்ள புதிய மாற்றங்கள் முழு விவரம் இதோ..!
ஏடிஎம் கட்டணங்கள் மாற்றம்:-
மே 1, 2025 முதல், ஏடிஎம் பயன்பாட்டு கட்டணங்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வருகின்றன.
புதுப்பிக்கப்பட்ட விதிகளின் கீழ் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு பெருநகரப் பகுதிகளில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் 5 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளையும் (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இரண்டும் உட்பட) பெறுவார்கள்.
பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ. 23 மற்றும் வரி செலுத்த வேண்டும். முன்னதாக இந்தக் கட்டணம் ரூ.21 ஆக இருந்தது. இது தவிர, நீங்கள் இருப்பைச் சரிபார்த்தால், இதற்கும் ரூ.7 கட்டணம் செலுத்த வேண்டும், முன்பு கட்டணம் ரூ.6 ஆக இருந்தது.
சிலிண்டர் விலை:-
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலைகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
இந்த முறையும், எரிவாயு சிலிண்டரின் விலை மே 1 ஆம் தேதி மறுஆய்வு செய்யப்படும். அதன்படி விலை ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு:
ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றங்கள் இருக்கும். பயணிகள் புதிய முறையின்படி, இனிமேல், காத்திருப்பு(வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகள் பொதுப் பெட்டிகளில் மட்டுமே செல்லுபடியாகும். ஸ்லீப்பர், ஏசி கோச் பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட்டுடன் பயணிக்க முடியாது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை:-
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 1 மாதம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, மே 1 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை விடப்பட்ட நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது.
FASTag GPS கட்டணம்:-
மே 1 முதல் FASTag-ஐ GPS கட்டணம் என செய்தி பரவிய நிலையில் FASTag ரத்து செய்யப்படவில்லை. நாடு தழுவிய அளவில் GPS அடிப்படையிலான சுங்கச்சாவடிக்கு மாறுவதற்கான எந்த திட்டமும் தற்போது இல்லை என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) தெளிவுபடுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்