Breaking News

சூரிய புயல் உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாகபலராலும் ஷேர் செய்யப்பட்ட செய்தி 16ம் தேதி முதல் 22 ம்தேதி வரை சூரிய புயல் அடிக்கும் உலகம் இருளில் முழ்கும் என்று நேற்று தான் 16.12.15. உலகில் அப்படி  நடந்ததாக எங்கும் செய்திகள் வரவில்லை

இன்று  17ம் தேதி  இன்றும் அது போல் செய்தி வரவில்லை

உலகம் இருளில் முழ்கும் என்று ஷேர் செய்தவர்கள் எல்லாம் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை



அப்படி என்றால் உண்மை நிலை என்ன

உலகம் இருளில் மூழ்குமா?

சூரிய புயல் என்பது சூரியனில் அவ்வப்போது ஏற்படும் ஒரு நிகழ்வு.

இதனால் பூமிக்கு ஏதேனும் அபாயம் ஏற்படுமா என்றால், அதற்கு சாத்தியம் குறைவுதான்  ஏனெனில் அதன் வெப்ப துகள்கள் வழி மண்டலங்களை தாண்டி பூமிக்கு வருமுன்னே கரைந்து விடும். அதனால் இது குறித்து பயப்பட தேவையில்லை.

சூரிய புயலால் அதிகம் அடித்தால் உலகில் மின்சாரம் தடைபடும் என்பதும், அதனால் உலகில் இருள் ஏற்படும் என்பதும் கணிப்பே அன்றி வேறில்லை.

எனவே இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

சில ஊடகங்கள் மற்றும் வாட்ஸப் பேஸ்புக் போன்ற சமூக தளங்களிலும் ஆய்வில்லாமல் இது போன்ற தகவலை பரப்பி பீதியை கிளப்பி வந்தனர்

எனவே மக்களே தெளிவான முறையில் சிந்தித்து உண்மையை உணருங்கள்.

அட்மின் மீடியா ஆதாரம்







ஒரு செய்தி கேள்விபட்டால்
அதை ஆராயாமல் ஆர்வமாக ஷேர் செய்யும்
நண்பர்களே இனியாவது சிந்தியுங்கள்.

நாம் எதை ஷேர் செய்ய வேண்டும்

எதை ஷேர் செய்யகூடாது

எதை ஷேர் செய்தால் மக்கள் பயன் பெறுவார்கள்.

எதை ஷேர் செய்தால் மக்கள் பயப்படுவார்கள்

என ஆராய்ந்து உண்மை தன்மையை அறிந்து ஷேர் செய்யுங்கள்

இந்த வாட்ஸ்ஆப் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

இனிவரும் காலங்களில் நன்மை ஏவி தீமை தடுக்க பயன் படுத்துவோம்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback