Breaking News

தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என பெயர் வைப்பு

அட்மின் மீடியா
0
தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என பெயர் வைப்பு

தமிழ்நாட்டில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இக்கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.





சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று (செப். 9) நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், ஐயுஎம்எல், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என பெயர் வைப்பு

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக கூட்டணி கட்சி கூட்டம் நிறைவு பெற்றது.பனையூா் தவெக தலைமை அலுவலகத்தில் முதல்வா் விஜய் தலைமையில் நடந்த தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் நிறைவடைந்தது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக ஆதரவு கட்சிகள் உடனான 2வது கட்ட ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. கூட்டணிக்கு பெயர் வைப்பது, ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தேர்வு, 


இடைத்தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

திருமாவளவன்

தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இதுவரை ஆதரவு கட்சிகளாக இருந்த நாங்கள் இன்று முதல் கூட்டணிக் கட்சிகளாக வலுப்பெற்றுள்ளோம். மதச்சார்பின்மையும், சமூகநீதியும் இந்த கூட்டணியின் முதன்மையான குறிக்கோள்கள். மதவாத, சாதிவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை. மதச்சார்பின்மையை அகில இந்திய அளவில் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி, ஒருமித்த கருத்தோடு த.வெ.க கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்றார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், 

பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்கும். பிரதமர் வேட்பாளரை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி ஏற்கும். பிரதமர் வேட்பாளருக்கு ஆதரவாக CM விஜய் பிரசாரம் செய்வார். கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவதற்கான அடுத்த நகர்வுகள் எடுக்கப்படும். கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும். இடைத்தேர்தலுக்கான இக்கூட்டணியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். இடைத்தேர்தல் வெற்றிக்காக கூட்டணி கட்சிகள் இணைந்து பாடுபடும். தமிழ்நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி” என்றார்.

வைகோ:

தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 

த.வெ.க கூட்டணியின் பெயரை ஒருமனதாக தேர்வு செய்தோம்.. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வோம்.. தோளோடு தோள் கொடுத்து வெற்றிப்பெறுவோம். மதச்சார்பின்மை, மற்றொன்று சமூகநீதி. இந்த இரண்டையும் இலக்காக வைத்து இந்தக் கூட்டணி இயங்கும். இது சமூகநீதியை இலக்காக கொண்ட கூட்டணி. மதச்சார்பின்னை, சமூகநீதியை இலக்காக வைத்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி இயங்கும். கூட்டணியின் பெயரிலேயே லட்சியமும் நோக்கமும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடத்தப்படும். தமிழ்நாடு மற்றும் புதுவையில் ம.ச.வெ. கூட்டணி செயல்படும். கூட்டணி தலைமை, ஒருங்கிணைப்பாளராக முதல்வர் விஜய் செயல்படுவார்.” என்றார்.

ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் 

தவெக கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து முதல்வர் விஜய் ஆட்சியின் சிறப்பு குறித்தும், ஊழல் இல்லாத ஆட்சியைத் தொடர்வது குறித்தும் மிகவும் விமர்சையாகப் பேசப்பட்டது.

இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது இல்லை. முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு இன்று பிறந்திருக்கிறது

இந்த வரலாறு சமீபகாலத்துடன் நின்றுவிடாது. இந்த வரலாறு இப்போது போல் என்றும் தொடரும். அப்படி தொடர்ந்து வரும் காலங்களில் உள்ளாட்சி, இடைத்தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவெக தலைமையில் இணைந்து செயல்பட்டு வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வருங்காலத்தில் உலகமே பாராட்டக் கூடிய வரலாற்றை படைக்கும். தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான். இது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback