28 நாள் இல்லை இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ் டிராய் அறிவிப்பு
28 நாள் இல்லை இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ் டிராய் அறிவிப்பு
தொலைதொடர்பு நிறுவனங்கள் 28 நாள் மொபைல் ரீசார்ஜ்க்கு பதிலாக இனி கட்டாயமாக 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் வழங்க வேண்டும். இதனால் ஆண்டுக்கு 13 ரீசார்ஜ்களுக்குப் பதிலாக இனி 12 ரீசார்ஜ்களே போதும்.
நெட் தேவை இல்லாதவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் குரல்/SMS பிளான்கள் வழங்க வேண்டும்.
ஒரே தேதியில் மாதாந்திர ரீசார்ஜ் புதுப்பிக்கும் வசதியையும் வழங்க வேண்டும்“- டிராய் அறிவித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதிய தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுவரை வழங்கி வந்த 28 நாள் செல்லுபடியாகும் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு பதிலாக, இனி கட்டாயமாக 30 நாள் செல்லுபடியாகும் திட்டங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையதள (டேட்டா) வசதி தேவையில்லாத பயனர்களுக்காக குறைந்த கட்டணத்தில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி மட்டும் கொண்ட சிறப்பு திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் எ
அதேபோல், மாதந்தோறும் ஒரே தேதியில் ரீசார்ஜ் புதுப்பிக்கும் வசதியையும் அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்று புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
