Breaking News

BREAKING NEWS ஆபாச பேச்சு - உதயநிதி ஸ்டாலின் கைது

அட்மின் மீடியா
0
உதயநிதி ஸ்டாலின் கைது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த காவல்துறை.!


காவல்துறை வாகனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் உதயநிதி

த்ரிஷா குறித்து பேசிய விவகாரம் - உதயநிதியை கைது செய்து வாகனத்தில் அழைத்துச்செல்லும் காவல்துறையினர்.இன்று மதியம் 12 மணி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அது தொடர்பாக எந்த தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனக் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

நடிகை த்ரிஷா குறித்துப் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உட்பட மொத்தம் 9 சட்டப் பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.



உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு

THE BHARATIYA NYAYA SANHITA (BNS), 2023 பிரிவு 196

THE BHARATIYA NYAYA SANHITA (BNS), 2023 பிரிவு 192

THE BHARATIYA NYAYA SANHITA (BNS), 2023 பிரிவு 352

THE BHARATIYA NYAYA SANHITA (BNS), 2023 பிரிவு 296(b)

THE BHARATIYA NYAYA SANHITA (BNS), 2023 பிரிவு 61

THE BHARATIYA NYAYA SANHITA (BNS), 2023 பிரிவு 351(2)

THE BHARATIYA NYAYA SANHITA (BNS), 2023 பிரிவு 79

TAMIL NADU PROHIBITION OF HARASSMENT OF WOMAN (AMENDMENT) ACT, 2002. பிரிவு 4/

THE INFORMATION TECHNOLOGY ACT, 2000/பிரிவு 67

ஆகிய 9 பிரிவுகளில் கீழும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அதிகபட்சத் தண்டனைகள் தனித்தனியாக விதிக்கப்பட்டால், ஒட்டுமொத்தமாக 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெறக்கூடிய வாய்ப்புகள் இதில் அடங்கியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கை அவசரமாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினை சிறைக் காவலில் அடைக்கக் கூடாது என்றும், இன்றைய இரவுக்குள் அவருக்குக் காவல் நிலைய ஜாமீன் வழங்கி விடுவிக்க வேண்டும் என்றும் அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback