Breaking News

1 நிமிடம் போதும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்பதை சரிபார்க்க முழு விவரம் Final voter list 2026

அட்மின் மீடியா
0

தமிழக சட்டபேரவைக்கு ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு, மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சட்டப்பேரவை, தேர்தலையொட்டி, மாநிலம் முழு தும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்றது. இதன்படி, கடந்த டிச., 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி Final voter list 2026

https://www.adminmedia.in/2026/02/final-voter-list-2026.html

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க  - புதிய வாக்காளர் பட்டியல் PDF டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2026/02/pdf-new-voter-list-pdf-download.html


இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட்டுள்ளார்

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும்.

ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925,

பெண் வாக்காளர்கள் - 2,89,60,838,

மூன்றாம் பாலினம் - 7,617.

பொதுமக்கள், voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI NET கைபேசி செயலி மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா ஒரே ஒரு SMS அனுப்பினால் போதும்  தேர்தல் ஆணையம் உடனே உங்கள் ஓட்டு விவரத்தை பதில் மெசஜாக அனுப்பும்

ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி 

https://electoralsearch.eci.gov.in/uesfmempmlkypo

https://electoralsearch.eci.gov.in/  click here

ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்

ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி

முதலில் கீழே மேலே உள்ள  Link click செய்யுங்கள் அதில் Search by EPIC என்பதை கிளிக் செய்யுங்கள் 

அடுத்து மொழியை தேர்ந்தெடுக்கவும்

அதன்பின்பு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிடவும்

அதன் பின்பு உங்கள் மாநிலத்தினை தேர்ந்தெடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சா கோடு சரியாக பதிவிட்டு சர்ச் என்பதை கிளிக் செய்யுங்கள் 

உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் அதில் உங்க Assembly constituency number, part number, part serial number  note பண்ணிக்கோங்க

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

புதிய வாக்காளர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவராக இருந்தால் SEARCH BY DETAILS ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 

அதில், தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தகவல்கள் அணைத்தையும் சரியாக பதிவிடவும். பின்னர் கேப்சாவை சரியாக பதிவிட்டு search ஆப்சனை க்ளிக் செய்யவும்

வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் அனைத்து தகவல்களும் சரியாக தெரியாது என்பவர்கள் மூன்றாவது ஆப்ஷனான SERACH BY MOBILE என்பதை க்ளிக் செய்யவும்.

இதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவிட்டு, உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ எண்ணை உள்ளிட்டு, கேப்சாவை சரியாக டைப் செய்து search ஆப்சனை க்ளிக் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய, '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்!

உங்கள் மொபைல் போனில் மெசஜ் ஆப்பில் 

ECI <space> உங்கள் EPIC எண் 

(உதாரணம்: ECI TSK0000000) டைப் செய்து 

'1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால், 

அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும் அவ்வளவுதான்

ஒருவேளை தகவல் வரவில்லை என்றாலோ அல்லது பெயர் நீக்கப்பட்டிருந்தாலோ, உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவோ அல்லது அதிகாரிகளிடமோ முறையிடலாம்.


Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback