நடிகர் விஜய்க்கு எதிராக மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரங்கள்,
அட்மின் மீடியா
0
விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
லண்டனில் பிறந்து வளர்ந்த இலங்கை பூர்வீகத்தை கொண்ட சங்கீதா, ஆரம்பத்தில் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து பின்னர் வாழ்க்கைத் துணையாக மாறினார். 1996ஆம் ஆண்டு ‘பூவே உனக்காக’ வெற்றிக்குப் பிறகு சென்னை வந்த அவர், படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை சந்தித்தது இவர்களின் உறவுக்கு தொடக்கமாக அமைந்தது.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் 1999 ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்து மற்றும் கிறிஸ்தவ முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சஞ்சய் வெளிநாட்டில் திரைப்படக் கல்வி முடித்து இயக்குநராக அறிமுகமாக உள்ளார். திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார்.
விஜய்யின் ஆரம்பகால வளர்ச்சியில் சங்கீதா முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.கடந்த சில காலமாக சங்கீதா பொதுநிகழ்ச்சிகளில் காணப்படாதது சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில், விவாகரத்து மனுவில் திருமணத்தை மீறிய உறவு குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய்க்கு எதிரான மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரங்கள்,
கடந்த 2021-ம் ஆண்டு முதலே தங்களுக்குள் கசப்பான சம்பவங்கள் தொடங்கயதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார். விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை தான் கண்டுபிடித்ததாகவும், அது தனது நம்பிக்கையை முற்றிலுமாக உடைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த உறவை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்தும், அதனை அவர் செயல்படுத்தவில்லை என்பதே சங்கீதாவின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது
சம்பந்தப்பட்ட அந்த நடிகை விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்ததாகவும், அதற்கு விஜய் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார். இந்தச் செயல்கள் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் ஈடு செய்ய முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜய் தன்னை நடத்திய விதம் குறித்து உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ள சங்கீதா, சண்டைக்கான காரணங்கள் குறித்துப் பேச முற்பட்டபோது விஜய் அதனைத் தவிர்த்ததாகக் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், வீட்டின் ஒரு பகுதியிலேயே தன்னைத் தனிமைப்படுத்தி வாழ வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், இது ஒரு கௌரவமான வாழ்க்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு விவாகரத்து வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள சங்கீதா, விஜய்யின் சமூக அந்தஸ்து மற்றும் வருமானத்திற்கு ஏற்ப கௌரவமான ஜீவனாம்சத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும், வழக்கு முடியும் வரை அல்லது தகுந்த மாற்று வசதி செய்து தரும் வரை, தற்போது வசித்து வரும் நீலாங்கரை வீட்டிலேயே தங்குவதற்கான உரிமையையும் அவர் கோரியுள்ளார்.
குடும்ப கௌரவம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் விசாரணையை ரகசியமாக (In-camera proceedings) நடத்த வேண்டும் என்று சங்கீதா வலியுறுத்தியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அந்த நடிகையை இந்த வழக்கில் இரண்டாம் எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்ளத் தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை விஜய்யுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முடிவுக்கு வரத் தான் முயற்சி செய்ததாகச் சங்கீதா கூறியுள்ளார். ஆனால், விஜய் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள முன்வராததால், வேறு வழியின்றித் தனது 25 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு 73-ஆவது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்