பிரபல தமிழ் சீரியல் நடிகை நந்தினி தற்கொலை..!! நடந்தது என்ன முழு விவரம்
பிரபல தமிழ் சீரியல் நடிகை தற்கொலை..!!
கன்னடத் தொலைக்காட்சியில் ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா தொடரிலும் தமிழில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலிலும் நடித்து வந்த நடிகை நந்தினி பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டார். .
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி.பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்திருந்தவர், கௌரி தொடர் மூலம் தமிழுக்கு வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.
தற்போது வரை, நந்தினி மரணத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இந்த இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
