சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்றால் என்ன தெரிந்து கொள்ளுங்கள்
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்றால் என்ன:-
வாக்காளர் பட்டியலை பிழையற்றதாகவும், முழுமையாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) அவ்வப்போது பல்வேறு திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மிக முக்கியமானது, “சிறப்புத் தீவிரத் திருத்தம்” (Special Intensive Revision – SIR) எனப்படும் விரிவான சரிபார்ப்புச் செயல்பாடு ஆகும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய அளவிலான சரிபார்ப்புச் செயல்முறையாகும்.
வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும், முழுமையாகவும், தவறுகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
போலி வாக்காளர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் தகுதியற்றவர்களை நீக்குவதில் இத்திருத்தம் தீவிர கவனம் செலுத்துகிறது.
அதேசமயம், 18 வயது பூர்த்தியடைந்த தகுதியுள்ள புதிய வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதும், வாக்காளர் விவரங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்வதும் இந்தச் செயல்பாட்டின் முக்கிய அம்சங்களாகும்.
முக்கிய தேர்தல்களுக்கு முன்னரோ அல்லது நீண்ட காலமாக பட்டியல் புதுப்பிக்கப்படாமல் இருக்கும்போதோ, அல்லது மக்கள்தொகை இடமாற்றம், நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மாற்றங்களைச் சரிசெய்யும் நோக்கிலோ இந்தச் செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 324, 325, 326 பிரிவுகளின்படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, பிரிவு 21(3) இன் கீழும் இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்காக வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், புகைப்படம் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சம்பத்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக 4-ந்தேதிமுதல் வந்து கொடுப் பார்கள் அந்த படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் தகவலை பொதுமக்கள் நிரப்பி தரவேண்டும். அதனுடன் எந்த ஆவணமும் இணைத்து தர தேவையில்லை
வாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா? எப்படி செக் செய்யலாம்? how to check voter id list in tamilnadu 2025
https://www.adminmedia.in/2025/10/how-to-check-voter-id-list-in-tamilnadu.html
ஒருவேளை 2002, 2005 ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் கள் இல்லாவிட்டால் எந்த தொகுதியில் அதற்கு முன்பு அவர்களுக்கு வாக்கு இருந்தது என்பதை ஆய்வு செய்து, அதனுடன் ஒப்பிட்டு இணைக்கப்படும்.
ஒருவேளை அவர்கள் பெயர் இல்லாவிட்டால் அவர்களது பெற்றோர் அடையாள அட்டை, அவர்கள் வசித்த தொகுதி, அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்யப்படும்.
எதிலுமே அவர்கள் பெயர் இல்லாவிட்டால் வரைவு பட்டியலில் அவர்கள் பெயர் இடம் பெறாது. மீண்டும் அவர்கள் ஆவணங்களை கொடுத்து மனு செய்ய வேண்டும் என கூறினார்
மேலும் வாக்காளர்கள் முகவரி மாறி இருந்தால் அதிகாரியிடம் தெரி விக்கலாம். தொகுதி மாறி இருந்தால் அவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. மீண்டும் ஆட்சேபனை காலமான டிசம்பர் 9-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 8-ந் தேதிக்குள் முகவரி மாற்றத்திற்கான மனு மற்றும் அதற்கான ஆவணங் களை இணைத்துத் தரவேண்டும் என்று தெரிவித்தார்.
சொந்த ஊரில் பெற்றோர்கள் இருப்பார்கள் ஆனால் அவர்களது மகனோ, அல்லது மகளோ நகரங்களில் பணியாற்றுபர்களுக்கு அவர்களது சொந்த ஊரில் வாக்காளர் அடையாள அட்டை எண். இருக்கும். அவர்களுக்கு
கணக்கெடுப்பு படிவத்தை பிள்ளைகளுக்கு பதில் அவர்கள் பெற்றோர்களே பூர்த்தி செய்து கொடுத் தால் போதும் .
தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தயாராக வச்சிக்கோங்க. BLO நேரில் வரும் போது, படிவத்தில் இருக்கும் புகைப்படம் பழையதாக இருந்தால், புது போட்டோ கேட்பார்.
BLO வீட்டிற்கு வரும் போது form ஃபில் பண்ணி குடுத்தால் போதும். தேவைப்பட்டால் போட்டோ கேட்பார்கள். வேறு ஆவணங்கள் தேவையில்லை.
இந்த பணி 30 நாட்களுக்கு நடக்கும். அதன் பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவார்கள். அதில் பெயர் இல்லை என்றால் 13 ஆவணங்களில் ஒன்றை கொடுத்து பெயர் சேர்க்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:-
இணையவழி விண்ணப்பம் மற்றும் இ-சைன் அம்சம்: வாக்காளர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது ECINet செயலி மூலமாகவும் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
புதிதாகப் பெயர் சேர்த்தல் (படிவம் 6), பெயர் நீக்கம் (படிவம் 7) அல்லது திருத்தம் (படிவம் 8) செய்யக் கோரும் விண்ணப்பங்களுக்காக, தேர்தல் ஆணையம் தனது ECINet வலைதளம் மற்றும் செயலியில் புதிய ‘இ-சைன்’ (e-sign) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இ-சைன் வசதியின் கீழ், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் விண்ணப்பதாரர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். இணையவழியில் விண்ணப்பிப்பவர்கள், ஒப்புகைச் சீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
புதிய வரைவு வாக்காளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
2025 ஆம் ஆண்டிற்கான புதிய வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் அதன் தொடர் நிகழ்வுகளுக்கான கால அட்டவணை பின்வருமாறு:
சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்: அக்டோபர் 28, 2025 முதல் பிப்ரவரி 7, 2026 வரை நடைபெறும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: டிசம்பர் 9, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும்.
கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகள்: இந்த வரைவுப் பட்டியலில் திருத்தங்கள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், டிசம்பர் 9, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை வாக்காளர்கள் தங்கள் கோரிக்கை அல்லது ஆட்சேபனை மனுக்களைத் தாக்கல் செய்யலாம். வாக்காளர் பதிவு அலுவலர் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து முடிவெடுப்பார்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: அனைத்து திருத்தப் பணிகளும் முடிவடைந்த பின்னர், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
Tags: தமிழக செய்திகள்
