Breaking News

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம் ... பதறவைக்கும் காட்சிகள்

அட்மின் மீடியா
0

அமெரிக்காவின் லூயிஸ்வில்லி விமான நிலையத்திற்கு அருகில் UPS நிறுவனத்தின் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்


அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த UPS 2976 என்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விமானம் லூயிஸ்வில்லிலிருந்து (louisville) ஹொனலுலுவில் (Honolulu) உள்ள டேனியல் கே. இனூயே சர்வதேச விமான நிலையத்திற்குச் புறப்பட்ட நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

புறப்பட்ட உடனேயே விமானத்தில் இயந்திர கோளாறு அல்லது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானம் தரையில் விழுந்தபோது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ ஒரு மைல் தூரத்திற்குப் பரவியது மற்றும் இதனால் கரும்புகை வானில் சூழ்ந்தது. விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாகக் கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவித்தார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1985923334400589998

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback