Breaking News

FACT CHECK: வாட்ஸ்அப் குழுக்களில் செய்தித்தாள்களின் PDF பகிர்வது சட்டவிரோதமானதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வாட்ஸ்அப் குழுக்களில் செய்தித்தாள்களின் PDF பகிர்வது சட்டவிரோதமானது. மேலும் குழு நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கலாம் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



ஆம் அந்த செய்தி பாதி உண்மை பாதி பொய்யானது


உண்மை என்னவென்றால் பல செய்திதாள் நிறுவனங்கள் தங்கள் பதிப்புகளை வாசகர்கள் எளிய முறையில் படிக்க இணையதளத்தில் அவர்களது  வைப்சைட்டில் பதிவிடுகின்றார்கள்

அதில் சில செய்தி நிறுவனங்கள் வாசகர்களுக்கு இலவசமாக படிக்கலாம் என்று கொடுத்திருப்பார்கள்

அதே சமயம் சில செய்தி நிறுவனங்கள் தங்கள் வாசகர்களுக்கு கட்டணமுறையில் சந்தா வசூல் செய்து அவர்களுக்கு அந்த செய்திதாள் மற்றும் புத்தகங்களை படிக்க அனுமதித்திருப்பார்கள்




அப்படி இலவசமாக கொடுக்கும் செய்தி தாள்களை நீங்கள் மற்றவர்களுக்கு பகிர்வது குற்றமாகாது ஆனால் அதே சமயம் கட்டணமுறையில் கொடுக்கும் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை நீங்கள் டவுன்லோடு செய்து மற்றவர்ர்களுக்கு ஷேர் செய்வது சட்டபடி குற்றமாகும்

இதே போல் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு இனையத்தில் இருந்து டவுன்லோடு செய்து வாட்ஸப், மற்றும் டெலகிராம் குருப்பில் ஷேர் செய்தவரை கைதும் செய்துள்லார்கள்





Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback