Breaking News

கர்நாடகா விமானம், ரயில்களுக்கு தடை இல்லை: முதல்வர் எடியூரப்பா விளக்கம்

அட்மின் மீடியா
0

கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை என முதல்வர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். 


முன்னதாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் எதனையும் அனுமதிக்க முடியாது என கர்நாடகா தடை விதித்தாக செய்திகள் வந்தது.


இப்படி வெளியான செய்திக்கு அம்மாநில அரசு விளக்கம்  அளித்துள்ளது. எந்த மாநில ரயில் அல்லது விமானங்களுக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. மேலும் ரயில்கள் மற்றும் விமானங்களை குறைவாக இயக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம். அதிகமாக வெளிமாநில பயணிகளை வந்தால் அவர்களை தனிமைப்படுத்த முடியவில்லை என்று அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.




Give Us Your Feedback