Breaking News

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு:பேருந்துகள் இயக்கலாம், வழிபாட்டுத்லங்கள் திற்க்க தடை:தளர்வுகள் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0
 தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 



இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை முழு விவரம்

தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் 


மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்


மண்டலம் 2 : தருமபுரி, வேலுhர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி


மண்டலம் 3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி 


மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை


மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்


மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி


மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு


மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிமண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுமாவட்டங்கள் மற்றும் 


மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொதுபோக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. 

மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு

அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி

ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை காய்கறி கடைகள், உணவகங்கள்(பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். 

ஜூன் 8ஆம் தேதி முதல் தேனீர் கடைகள், ஹோட்டல்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 


சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி 

ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய அனுமதி

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை


வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்

50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி

ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு

கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்

நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை... திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback