Breaking News

அயோத்தி வழக்கில் அவதூறு பதிவு செய்தால் தேச பாதுகாப்பு சட்டம் பாயும் .உஷாரா இருங்க

அட்மின் மீடியா
0
அயோத்தியா வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது இதனால் அயோத்தி  வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்க்கு முன்னால், சமூக ஊடக தளங்களில் எந்தவொரு மதம், சமூகம், தெய்வங்கள், பிரபல நபர்கள் ஆகியோருக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று  மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது
 
 
 
மேலும் சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி பதிவிடுவோர் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப்பிரதேச போலீஸார் எச்சரித்துள்ளனர்.


அயோத்தியில் டிசம்பர் 28 வரை  144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவார்கள்


ஆகவே நமது அட்மின் மீடியா சார்பாக வரவிருக்கும் கோர்ட்டு தீர்ப்பை அனைத்து மதத்தினரும் அமைதியுடன் ஏற்றுக்கொள்ள நமது குழுமத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback