Breaking News

ஈரானில் கபுரில் வேதனை செய்யபடும் சத்தம்

அட்மின் மீடியா
0
மார்க்கத்தின் கண்ணியத்தை பாழாக்கும் கபுர் வதந்திகள்


ஈரானில் ஒரு கபுருக்கில்லிருந்து வேதனை செய்யப்படும் சத்தம் வருகிறது
 என்று பலரும் ஒரு செய்தியையும் ஒரு வீடியோவும் ஒரு ஆடியோவும் ஷேர் செய்கின்றார்கள் அது உண்மையா❓


கப்ரில் நடக்கும் வேதனைகளை உலகில் வாழும் மனிதர்கள் அறிய முடியுமா? என்பதை முதலில் ஆராய்வோம்.


ஆதாரம் 1

அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.   # அல்குர்ஆன் 23:00


மனிதர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் முன்னே திரை போடப்படுகின்றது என்று இவ்வசனம் கூறுவதால் உயிருடனிருப்பவர்கள் கப்ரில் நடப்பதையும், கப்ரில் இருப்பவர்கள் இவ்வுலகில் நடப்பதையும் அறிய முடியாது என்பதை அறிகிறோம். அறிய முடியும் என்றால் திரை போடப்படுகின்றது என்ற இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமில்லாது போய்விடும்.

 ஆதாரம் 2

இந்த சமுதாயம் கப்ரில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற அச்சம் இல்லா விட்டால் நான் செவியுறுகின்ற கப்ரின் வேதனையை நீங்கள் செவியுறுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்திருப்பேன் என்பது நபிமொழி

அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித் (ரலி) நூல் : முஸ்லிம்


கப்ரில் நடந்ததை நீங்கள் அறிந்து கொண்டால் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்ய முன்வரமாட்டீர்கள் என்ற தகுந்த காரணத்தைக் கூறி, அதனால் கப்ரில் நடப்பதை நீங்கள் அறிய முடியாது எனவும் நபி (ஸல்) அவர்களை தெளிவு படுத்துகின்றார்.


கபூர் வேதனை என்பது ஒருவருக்கு இறைவன் வழங்கினால் அது மறுமைநாள் அன்று நாம் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரைக்கும் நடைபெறும் என்பது நாம் அறிந்த உண்மை !

அந்த வேதனை உடலுக்கு வழங்கப்படுகின்றதாக சிலர் தவறாக எண்ணி உள்ளோம் நம் உடல் சில காலங்களில் மண்ணோடு மண்ணாகி விடும் எனவே வேதனை என்பது நம் ரூஹுக்கு என்பதுதான் சரியானதாகும் !!

 ஆதாரம்3

கப்ரில் நடக்கும் வேதனையை மனித – ஜின் இனத்தைத் தவிர கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட அனைத்தும் செவியுறும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : பரா (ரலி) நூல்கள் : அஹமத், அபூதாவூத்

இந்த ஹதீஸும் கப்ரில் நடப்பதை எந்த மனிதனும் அறிய முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.

இந்த நபிமொழிகளுக்கும், மேற்கண்ட குர்ஆன் வசனத்துக்கும் முரணாக கபுரில் இருந்து சத்தம் என்று இந்தக் கதை அமைந்துள்ளது.

மேலும் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது ஆகும்

எனவே நாம் இந்த விஷயத்தை நம்பினால் இஸ்லாத்தை விட்டு வெளியிறங்கி விடுவோம் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
எனவே மார்க்கத்தின் பெயரில் எச்செய்தி வந்தாலும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பகிரவும்.முடியாவிட்டால்  விட்டு விடவும்.பாவத்தில் சிக்காமாலிருக்க இது தான் வழி


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback