Breaking News

FACT CHECK:மூடப்பட்ட பள்ளிவாசலில் குரான் ஓதும் சத்தம் ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும்  அஸ்ஸலாமு அலைக்கும் மேலே உள்ள இந்த வீடியோவ எல்லாரும் மறக்காம பாருங்க,,,,, ஜூதான்  நாட்டில் கரோனா வைரஸ்  ஆல் அங்குள்ள பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன..... அந்த நாட்டில் உள்ள ஏதோ ஒரு பள்ளிவாசலில் மூணாவது ஜும்மாவில் குர்ஆன் ஓதும் சப்தம் கேட்கப்படுகிறது.... அங்கு இருப்பவர்கள் சென்று பார்க்கும் போதும் குரான் ஓதும்  சப்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.... சுபஹானல்லாஹ்..... இறைவனுடைய இல்லங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் இறைவன் மலக்குகளைக் கொண்டு அதை பூர்த்தி ஆக்குகிறான்.... இது உண்மையான சம்பவம்.... அல்லாஹ் போதுமானவன் என்று  ஒரு  வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தியும் அந்த வீடியோவும் உண்மையா எங்கு நடந்தது என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


கொரோனா ஊரடங்கின் காரணமாக உலகம்  முழுவதிலும் ஊரடங்கு கடைபிடிக்கபடுகின்றது, மேலும் பொது இடங்களில் சமூகஇடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என்று உலக சுகாதாரமையமும் எச்சரித்துள்ளது

மேலும் இதனால் உலகம் முழுவதும் வழிபாட்டுதளங்களும் மூடபட்டுள்ளன. அதேபோல் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி வாசல இமாம் ஒருவர் தனது பள்ளிவாசலின் கதவைத் தட்டி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் 



இறைவா எங்களை மன்னித்து விடுவாயாக உன்னுடைய வீட்டில் எங்களை  நுழையச் செய்வாயாக என்று  கண்ணீர் விட்டு கதறுகிறார்

இதைத்தான் சிலர் வேறுவிதமாக பரப்பி வருகிறார்கள் எனவே உண்மை தன்மை தெரியாமல் எந்த விஷயத்தையும் உணர்ச்சிவசப்பட்டு பார்வேர்ட் செய்ய வேண்டாம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.youtube.com/watch?v=RyHFjBeZ_28



எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் என அட்மின் மீடியா சார்பாக கேட்டுகொள்கின்றோம் மேலும் சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள அட்மின் மீடியாவுடன் தொடர்பில் இருங்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback