Breaking News

திருப்பத்தூரில் தெருவில் தொழுகை நடந்ததா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தெருவில் தொழுகை நடந்ததாக கூறி ஒரு புகைபடத்தை ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



பலரும் ஷேர் செய்யும அந்த புகைப்படம் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் கடந்த 17.05.2018 அன்று நடந்தது

அதனை யாரோ பொய்யாக வேலூரில் நடந்தது என ஷேர் செய்கின்றார்கள்


இந்த தகவல் குறித்து உடனடியாக திருப்பத்தூர் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள் இது குறித்து தங்கள் டிவிட்டர் பக்கத்தில் அந்த செய்தி பொய்யானது என்று குறிப்பிட்டு அந்த செய்தி பரப்புவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்கள்


பொய்யான செய்தி பரவக்கூடாது என்று உடனடியாக மக்களுக்கு உண்மையை தெரியவைத்து வழக்கு பதிவு செய்ததற்க்கு அட்மின் மீடியா சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback