Breaking News

FACT CHECK: சுரைய்யா என்ற ஒரு நட்சத்திரம் தோன்றினால் கொரோனா ஒழிந்துவிடுமா? உண்மை என்ன

அட்மின் மீடியா
2
சுரைய்யா என்ற ஒரு நட்சத்திரம் தோன்றினால் கொரோனா ஒழிந்துவிடும் என்று நபிகளார் முன்னறிவிப்பு செய்தார்கள் என்றும் அந்த சுரையா நட்சத்திரம்  மே 12 ஆம் தேதி  நிகழும் என பலரும் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உணமையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


சுரையா நட்சத்திரம் என்று ஒன்று உள்ளதா? 


சுரையா என்பது அரபு சொல்லாகும். இதனை தமிழில் ‘கார்த்திகை’ எனக் கூறுவர். கார்த்திகை என்பது ஓர் விண்மீன் கூட்டத்தின் பெயராகும். எல்லாக் காலங்களிலும் உதயமாகும் சுரையா நட்சத்திரம் மே மாதத்தில்  மாத்திரமே அதிகாலைப் பொழுதில் உதயமாகிறது. அவ்வாறு உதயமாகும் போது அது கோடைக்காலத்திற்கான அடையாளமாக கருதப்படுகிறது. அரபிகளிடத்தில் சுரையா எனும் நட்சத்திரக்கூட்டத்திற்கு அன்றிலிருந்து இன்று வரைக்கும் தனி மதிப்பு காணப்படுகிறது. 


சூரையா என்னும் நட்சத்திரம் உதிக்கும் பொழுது உலகத்தில் உள்ள எல்லாவிதமான தொற்று நோய்களும் அகன்று விடும் என்று இமாம் அஹ்மத்  இப்னு ஹம்பல் (ரலி) அவர்கள் கூறினார்களா?


பதில்: இல்லை



சூரையா என்னும் நட்சத்திரம் உதிக்கும் பொழுது உலகத்தில் உள்ள எல்லாவிதமான தொற்று நோய்களும் அகன்று விடும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்களா?

பதில் : இல்லை 


சூரையா என்னும் நட்சத்திரம் உதிக்கும் பொழுது உலகத்தில் உள்ள எல்லாவிதமான தொற்று நோய்களும் அகன்று விடும் என்று நாசா கூறியுள்ளதா?


பதில் : இல்லை 


சுரையா நட்சத்திரம் குறித்து ஹதிஸ் கூறும் உண்மை என்ன?

உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸுராகா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ‘நான் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் பேரித்தம் பழங்களை விற்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘நபி (ஸல்) அவர்கள் நோய்கள் (ஆஹதுன்) நீங்கும் வரை பழங்களை விற்பதை தடைசெய்துள்ளார்கள்’ எனக் கூறினார்கள். ‘அது எப்போது ஏற்படும்?’ எனக் கேட்டேன். ‘சுரையா தோன்றும் போது’ எனக் கூறினார்கள். 



(நூல்: முஸ்னத் அஹ்மத் 5105, 07/118). 


இதை வைத்து தான் சொல்கின்றார்கள் நபி ஸலல்லாஹூ அலை வஸ்சல்லம் அவர்கள் கூறிவிட்டார்கள் என கட்டுகதைகளை பரப்பிவருகின்றார்கள்

அதாவது சுரையா நட்சத்திரம் வானில் தோன்றும் காலம் கோடைகாலமாக இருப்பதால் பயிர்களுக்கு ஏற்படும் நோய்கள் அக்கோடைக் காலத்தில் நீங்கிவிடும் என்பது அரேபியர்களின் கணிப்பாக இருந்துள்ளது.

குறிப்பாக நட்சத்திரத்தின் சக்தியால் இவை நிகழ்கிறது என்பதையும் இவ்ஹதீஸ்கள் குறிப்பிடவில்லை. 

அதற்கு முன் பேரித்தம் பழங்களை விற்கும் போது வாங்குபவர் பேரித்தம் பழங்கள் முத்தாமல் பிஞ்சாக இருக்கும் அதனால் வாங்குபவர்கள்  ஏமாற்றம் அடையாமல் இருக்கவே இதனை கூறியுள்ளார்கள் என்று பார்க்கவேண்டும்

மேலும் இஸ்லாமிய சட்டக்கலை (பிக்ஹ்) அடிப்படையில் தொகுப்பட்ட ஹதீஸ் நூற்களில் ‘பழங்களை விற்றல்’ எனும் தலைப்பிட்டு, அதற்கு கீழ் இது போன்ற ஹதீஸ்களை அந்நூலாசிரியர்கள் கொண்டுவந்துள்ளனர். 



மேலும் சுரையா நட்சத்திரம் என்பது தொற்று நோய்கள் போன்ற மனிதர்களுக்கும், மிருகங்கள், பறவைகள் போன்றவற்றுக்கு ஏற்படும் நோயை குறிக்கவில்லை சிறந்த அறுவடைக்குரிய காலத்தைக் கணிக்கவே இந்நட்சத்திரங்கள் அடையாளமாக கூறப்பட்டுள்ளன என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஏனெனில் ஹதீஸ்களின் அர்த்தங்களை விளங்குவதற்கு நாம் எமது முன் சென்ற அறிஞர்களின் கருத்துக்களையே முற்படுத்த வேண்டுமென்பது ஓர் அடிப்படை விதியாகும். 

அவர்களில் ஒருவரும் இவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கொடுக்காத போது நாமும் அவ்வாறே அவற்றைக் கையாள்வது அறிவுசார்ந்த அம்சமாக கருதப்படுகிறது. 

இவ்வாறான புறளிகளை நாம் உடனே நம்பி, புதியதோர் கண்டுபிடிப்பாக இதை சித்தரிப்பதற்கு மிக முக்கிய காரணம் மார்க்கம் பற்றிய  தெளிவு  இல்லாததால் தான்

எனவே நாம் இஸ்லாம் பற்றிய ஏதாவது  செய்தி கிடைத்தவுடன் அதன் உண்மைதன்மை  தெறியாமல் சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுகின்றோம்  எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி மார்க்க செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. சம்சுதீன்May 2, 2020 at 1:37 PM

    மாஷா அல்லா நல்ல ஆய்வு,
    அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக, இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. சுரையா வந்தால் நீங்கி விடும் என்று சொன்னதுக்கு அர்த்தம்

    ReplyDelete