Breaking News

FACT CHECK: அமெரிக்கா பாரளுமன்றத்தில் குர்ஆன் ஓதப்படும் வீடியோ: உண்மை என்ன

அட்மின் மீடியா
0
அமெரிக்கா பாரளுமன்றத்தில் குர்ஆன் ஓதப்படும் வீடியோ பாருங்கள் இறுதியாக இறைவேதத்தை புரிந்து கொண்டார் என பலரும் ஓர்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் முன்னிலையில் குர்ஆன் ஓதப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



அந்த வீடியோ தற்போது நடந்தது போல் பலரும்  ஷேர் செய்கின்றார்கள் ஆனால் ஒருவர் முகத்திலும் மாஸ்க் இல்லை அதுவே அந்த சம்பவம் தற்போது நடக்கவில்லை என்பதற்க்கு ஒரு ஆதாரம்


அப்படியானால் எப்போது நடந்தது?  எதற்க்காக நடந்தது ?

  
அந்த வீடியோவில் உள்ள சம்பவம் கடந்த 2017 ம் ஆண்டு நடந்தது


அமெரிக்க அதிபராக 2017ம் ஆண்டு டிரம்ப் பதவியேற்றவுடன் சர்வ மத வழிபாட்டு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்ற வீடியோ அது


அந்த  நிகழ்ச்சியில் கிறிஸ்டியன், இந்து, சீக்கிய, இஸ்லாமிய மத குருக்களும் அனைத்து மத குருக்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது தெரிந்தது. 

மேலும் வீடியோவின் 36 : 40 வது நிமிடத்தில் குர்ஆன் ஓதப்படும் பகுதி வருகிறது. 

அந்த முழுவீடியோவில் குரான் பகுதியினை மட்டும் எடிட் செய்து தற்போது நடந்தது போல் வீடியோ ஷேர் செய்கின்றார்கள்.

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.c-span.org/video/?422134-1/president-vice-president-attend-national-prayer-service


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback