Breaking News

டெல்லியில் கொரேனா பாதித்த முஸ்லீம் மனிதர் ஒருவர் போலீஸ்காரர் மீது எச்சில் துப்பினாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
டெல்லியில் கொரேனா பாதித்த  முஸ்லீம் மனிதர் ஒருவர் போலீஸ்காரர்  மீது எச்சில் துப்புவதை பாருங்கள்




என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த வீடியோவில் ஒரு வேனில் இஸ்லாமியர் ஒருவரை பல போலிஸார் அழைத்து செல்கின்றாகள். அந்த இஸ்லாமியர் அந்த போலிஸரை திட்டி அவர்கள் மீது எச்சில் துப்புகின்றார் 

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த சம்பவம் மும்பையில் நடந்தது

அந்த சம்பவம்  கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது ஆகும்

அதாவது இந்தியாவில் ஊரடங்கு மார்ச் மாதம் 22 ம் தேதி தான் ஆரம்பம்மானது அதற்க்கு 1 மாதம் முன்பே நடந்தது இது

ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது அவரை பார்க்க வந்த அவரது குடும்பத்தார் வீட்டில் இருந்து  சமைத்து எடுத்து வந்த உணவை உண்ண  கொடுக்க அதற்க்கு மறுப்பு தெரிவித்த காவலரிடம் கோபத்தில் நடந்து கொண்ட சம்பவம் ஆகும்

இந்த சம்பவத்தின் வீடியோவை கட்செய்து தவறான செய்தி பதிந்து கொரானாவினை பரப்புகின்ரார் என  சமூகவளைதளத்தில் பொய்யாக பரப்புகின்றனர்

அட்மின் மீடியா ஆதாரம்



அட்மின் மீடியா ஆதாரம்
அந்த வீடியோவினை முழுமையாக பார்க்க


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback